BREAKING: சற்றுமுன் வங்கிக் கணக்கில் வந்தது ரூ.1000… குடும்பத் தலைவிகளே உடனே செக் பண்ணுங்க…!

By Srimathi on ஆவணி 15, 2025

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும்  ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை, குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கில், ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் இந்த திட்டத்தில் விடுபட்ட பெண்களும், தற்போது “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில், பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள். இவர்களுக்கும் விரைவில் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 24வது தவணை ரூ. 1000 சற்று முன் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. 1.15 கோடி பயனாளர்களுக்கு செலுத்தப்பட்டதாக அரசு கூறியுள்ளது. கடந்த மாதம் 15ஆம் தேதி முதல், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மூலம் விடுபட்ட நபர்களிடம் இருந்து, இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், அவை பரிசீலனை நிலையில் இருப்பதாக அரசு தெரிவித்தது.