GPay, Phonepe இருந்தா போதும்… FASTag ரீசார்ஜ் செய்வது ரொம்ப ஈஸி.. இரண்டே நிமிஷத்தில் வேலையை முடிக்க இதோ எளிய வழி..!

By Divyamayakannan on ஆவணி 15, 2025

Spread the love

இந்தியாவில் சுங்கச்சாவடிகளை கடந்துசெல்வதற்கு பணம் கட்டியோ அல்லது FASTag உபயோகித்தோ செல்கிறோம். பெரும்பாலான கார் உரிமையாளர்கள் FASTag தான் உபயோகிக்கிறார்கள் வங்கிகள் மற்றும் பல கட்டண வழங்கு நபர்களால் இந்த சிறிய RFID திக்க முன் பணம் செலுத்தி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும். காரின் முன் கண்ணாடியில் பாஸ்ட் ட்ராக் ஸ்டிக்கரை ஒட்டி விட்டால் போதும் சுங்கச்சாவடியை கடக்கும் போது தானாகவே கட்டணம் எடுத்துக் கொள்ளும். எப்போதும் கணக்கில் போதுமான பணம் இருக்க வேண்டும், சரியான நேரத்தில் ரீசார்ஜ் செய்வது முக்கியம். இப்போது FASTag ரீசார்ஜ் செய்யும் எளிய வழிகள் வந்துள்ளன.

UPI அடிப்படையில் உள்ள கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகளில் வங்கி இணையதளம் அல்லது மொபைல் ஆப்பின் மூலமாக வேகமாக பணம் செலுத்தலாம்.

   

கூகுள் பே மூலம் செயலியை திறந்து Pay bills-FASTag recharge தொடர்ந்து வங்கி கணக்கை தேர்வு செய்து தேவையான தொகையை யூ பி ஐ பின் மூலம் பரிவர்த்தனை செய்யலாம்.

   

பேடிஎம் மூலம், FASTag பகுதி சென்று வங்கி மற்றும் வாகனத் தகவலை பதிவிட்டு, Paytm wallet, UPI, கார்ட் அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தலாம்.

 

போன் பே மூலம், Recharge and Pay bills – FASTag Recharge என்பதை தேர்வு செய்து வங்கி மற்றும் கார் பதிவு எண்ணை செலுத்தி தேவையான தொகையை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள்.