இந்த ஆண்டில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக பலபேர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். இந்த ஆண்டில் தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருகிறது . தொடர் விடுமுறை காரணத்தினால் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் தீபாவளிக்கு முந்தைய நாளாகவே செல்ல திட்டமிடுவார்கள். தொடர் பண்டிகையையொட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் ரயில் பயணம் செய்ய திட்டமிட்டோருக்கு, டிக்கெட் முன்பதிவு செய்தால் 20% கட்டண சலுகையை அறிவித்துள்ளது.
வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி ரயிலை பயணம் செய்வதற்கு ஆகஸ்ட் 16ஆம் தேதியும், அக்டோபர் 18ஆம் தேதி ரயிலில் பயணம் செய்ய ஆகஸ்ட் 17ஆம் தேதியும் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது பயணம் செய்ய திட்டமிட்டோர்கள் டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள் . இந்த அறிவிப்பு நேற்று ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது, இன்று (ஆகஸ்ட் 15) முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் . வருகின்றார் அக்டோபர் மாதம் 13ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை முன்பதிவு செய்தால் பின்னர் அதே ரயிலில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 1 ஆம் தேதி வரை ஊருக்கு திரும்ப டிக்கெட் முன்பதிவுச் செய்ய முடியும்.
இதில் சில கட்டுப்பாடுகளும் உள்ளன. உதாரணத்திற்கு நீங்கள் சென்னையில் இருந்து மதுரைக்கு செல்கிறீர்கள் என்றால் ரிட்டன் டிக்கெட் மதுரையிலிருந்து சென்னைக்கு வர வேண்டும் வேறு எந்த ஊரில் இருந்தும் வர முடியாது. நீங்கள் ரயிலில் எந்த வகுப்பில் செல்கிறீர்களோ அதே வகுப்பில் தான் திரும்பவும் வர முடியும் வேறு வகுப்புகளுக்கு மாற முடியாது. அதேபோல் பயணச்சீட்டை முன்பதிவு செய்துவிட்டால் கட்டண பணத்தை திரும்பப் பெற முடியாது.
