உத்தரப்பிரதேச மாநிலம் கண்ணோஜ் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், பாடம் நடத்த வேண்டிய ஆசிரியை வகுப்பறை பெஞ்சில் படுத்து உறங்கியுள்ளார். அதே நேரத்தில், வகுப்பில் இருந்த மாணவர்கள் பாடம் படிக்காமல் செல்போனில் வீடியோக்களைப் பார்த்துக் கொண்டிருந்துள்ளனர். இந்த அதிர்ச்சிச் சம்பவம் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு இணையதளங்களில் வெளியாகிப் பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்தோ அல்லது ஆசிரியை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தோ பள்ளி நிர்வாகமும் காவல்துறையும் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
