தூங்கிய குடும்பத்தினரை அலர்ட் செய்த செல்லப்பிராணி…. நள்ளிரவில் பாம்புடன் போராடி உயிரை விட்ட ஜீவன்…. மெய்சிலிர்க்க வைக்கும் தியாகம்…!!

By Devi Ramu on ஆவணி 4, 2026

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் பாலியா பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வளர்த்து வந்த 9 வயதான ‘டாமி’ என்ற நாய், நள்ளிரவில் வீட்டை நோக்கி வந்த விஷப் பாம்பைக் கண்டு தொடர்ந்து குரைத்துக் குடும்பத்தினரை எச்சரித்துள்ளது. எல்லாரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் ஆபத்தை உணர்ந்த அந்த நாயானது, பாம்பை வீட்டுக்குள் விடாமல் வாசலிலேயே மறித்து நின்றுள்ளது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தப் பாம்புடன் கடுமையாகப் போராடி, இறுதியாக அதனைக்கடித்துக் கொன்றது.

இருப்பினும், அந்தப் கொடூரப் போராட்டத்தின் போது எதிர்பாராத விதமாகப் பாம்பு தீண்டியதால், நச்சு உடலெங்கும் பரவி டாமி பரிதாபமாக உயிரிழந்தது. தன் உயிரைப் பணையம் வைத்துத் தங்களைக் காப்பாற்றிய செல்லப் பிராணியின் இழப்பைத் தாங்க முடியாமல் அந்தக் குடும்பத்தினர் கண்ணீர் விட்டுப் புலம்பினர். நாயின் இந்த வீரத்தையும் நன்றியுணர்வையும் பாராட்டி அப்பகுதி மக்களும் அஞ்சலி செலுத்திய சம்பவம் அனைவரின் நெஞ்சையும் நெகிழ வைத்துள்ளது.