சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஸ்டாலின், இனிவரும் காலங்களில் திமுகவின் பிரச்சார பாணி நவீனமடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். டீக்கடைகளில் அமர்ந்து பேசிய அரசியலை, இப்போது சோசியல் மீடியாவிற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம் என்றும், காலமாற்றத்திற்கு ஏற்ப திமுக தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களை விடவும், சமூக வலைத்தளங்கள் தற்போது வலிமையான தேர்தல் களமாக உருவெடுத்திருப்பதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுவதாக அவர் பேசினார்.
கட்சியின் உட்கட்டமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ள அவர், திமுகவை அடுத்த நூறு ஆண்டுகளுக்கு உயிர்ப்புடன் வைத்திருக்க இந்த மாற்றங்கள் அவசியம் என்றார். மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே கட்சியின் அதிகார மையமாக இருந்துவிடக் கூடாது என்றும், ஒருவேளை யாராவது சுறுசுறுப்பாகச் செயல்பட இயலாது என்று கருதினால் அவர்களாகவே முன்வந்து பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், கோஷ்டி மோதல்கள் உள்ள இடங்களை அடையாளம் கண்டு அவற்றை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
சமீபத்திய தேர்தலில் தவெக வெற்றிக்கு சமூக வலைத்தளப் பிரச்சாரங்கள் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கப்படும் நிலையில், மக்களை நேரடியாகச் சந்திப்பதோடு அவர்களின் மொபைல் போன்களின் வாயிலாகவும் சென்றடைவதே வெற்றிக்கான வழி என ஸ்டாலின் உணர்த்தியுள்ளார். கொள்கைகளை விளக்கும் பிரச்சாரக் களமாக நாடகம், சினிமா, தொலைக்காட்சி எனத் தொடங்கி இப்போது சோசியல் மீடியா வரை திமுக தனது ஸ்டைலை மாற்றிக் கொள்ளத் தயாராகிவிட்டது. வரும் காலங்களில் திமுகவின் ஒவ்வொரு தொண்டரும் இணையதளங்களில் தீவிரமாகச் செயல்பட வேண்டும் என்பதே இக்கூட்டத்தின் முக்கிய செய்தியாக அமைந்தது.
ஆன்லைன் கடன் செயலிகளின் பேராசைக்கும், டிஜிட்டல் மிரட்டல்களுக்கும் மற்றுமொரு இளம் உயிர் பலியாகியிருக்கும் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…
அமெரிக்கப் பொருளாதாரத் தரவுகளின் அதிரடி மாற்றத்தால், சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குதிரை வேகத்தில் எகிறத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியான…
தமிழகப் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 200 கோடி ரூபாய் வரை மோசடி…
தற்போது பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் கோடை வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி, வரலாறு காணாத…
சமூக வலைத்தளமான 'X' தளத்தில் சுமன் ரஸ்தோகி என்பவரால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் லாரி விபத்து வீடியோ ஒன்று தற்போது இணையத்தில்…
ஐரோப்பிய நாடுகளில் நிலவி வரும் கடுமையான வெப்ப அலை காரணமாக, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள மக்கள் தங்களின் வீடுகளை…