“பணம் வேண்டாம்…” நடு இரவில் பயத்தில் கணவருக்கு லைவ் லொகேஷன் அனுப்பிய வெளிநாட்டு பெண்… டிப்ஸ் வாங்க மறுத்த இந்திய ஓட்டுநர் செய்த காரியம்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on ஆவணி 6, 2026

Spread the love

முதன்முறையாக இந்தியாவிற்குப் வருகை தந்த ரஷ்ய நாட்டை சேர்ந்த பெண் ஒருவர், நள்ளிரவில் டெல்லி விமான நிலையத்திலிருந்து ஹோட்டலுக்குச் செல்லத் டாக்ஸி ஒன்றைப் பதிவு செய்துள்ளார். பயணத்தின்போது அவருக்குக் கடும் பசி ஏற்படவே, அது குறித்து ஓட்டுநரிடம் தெரிவித்துள்ளார். தனியாகப் பயணித்ததால் தொடக்கத்தில் அந்தப் பெண் சற்றே அச்சமடைந்து தனது இருப்பிடத்தை கணவருக்குப் பகிர்ந்துள்ளார். ஆனால், அந்த ஓட்டுநர் வழியிலுள்ள ஒரு கடையில் வாகனத்தை நிறுத்தி, அப்பெண்ணுக்கு அன்போடு உணவை வாங்கித் தந்து பாதுகாப்பாக ஹோட்டலில் கொண்டு போய் சேர்த்துள்ளார்.

ஓட்டுநரின் இந்தச் சேவையால் நெகிழ்ந்த அப்பெண்மணி, பயணக் கட்டணம் மற்றும் உணவிற்கான தொகையுடன் சேர்த்து 1,000 ரூபாயை அன்பளிப்பாகக் கொடுக்க முற்பட்டுள்ளார். ஆனால், “எங்கள் நாட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பதே எங்கள் கடமை” எனக் கூறி அந்த ஓட்டுநர் கூடுதல் பணத்தைப் பெற மறுத்துவிட்டார். இந்திய ஓட்டுநரின் இந்த நேர்மையையும் மனிதாபிமானத்தையும் பாராட்டி அந்தப் பெண் இணையத்தில் பகிர்ந்த பதிவானது, தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் பெரும் பாராட்டைப் பெற்று வைரலாகி வருகிறது.