தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனமானது சில்லரை கடைகள் வாயிலாக மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. அனைத்து நாட்களிலும், தினமும் மதியம், 12 முதல் இரவு, 10 மணி வரை செயல்படுகின்றன. டாஸ்மாக் மூலம் தினமும் 100 கோடி அளவிற்கு அரசு வருவாய் ஈட்டி வருகிறது. இந்நிலையில் 2026-ம் ஆண்டுக்கான டாஸ்மாக் விடுமுறை நாள்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜன.16 (திருவள்ளுவர் தினம்), ஜன.26 (குடியரசு தினம்), பிப்.1 வள்ளலார் நினைவு நாள்), ஏப்.31 (மஹாவீர் ஜெயந்தி), மே 1 (தொழிலாளர் தினம்), ஆக.15 (சுதந்திர தினம்), செப்.26 (மிலாடி நபி). அக்.2 (காந்தி ஜெயந்தி) ஆகிய நாள்களில் மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்காது.
