“விஜய் ஆட்சியை கவிழ்க்க சதி?”…. “அஜித் 2031-ல் முதல்வரா? தனுஷுக்கு செக் வச்ச டாரட் ஜெயஸ்ரீ”…. சலசலக்கும் தமிழக அரசியல்…!

By Nanthini on கார்த்திகை 2, 2026

Spread the love

சாணக்கியா யூடியூப் சேனலின் ரங்கராஜ் பாண்டே நேர்காணலில், பிரபல டாரட் கார்ட் கணிப்பாளர் ஜெயஸ்ரீ கலந்துகொண்டு தமிழக அரசியல் எதிர்காலம் குறித்துப் பல்வேறு சுவாரஸ்யமான கணிப்புகளைப் பகிர்ந்துள்ளார். 13 ஆண்டுகளுக்கு முன்பே இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணத்தை (அவர் தொலைத்தொடர்புத் துறை சார்ந்த சென்னையைச் சேர்ந்த பெண்ணைக் காதல் திருமணம் செய்வார் என) துல்லியமாகக் கணித்ததன் மூலம் தற்போது இவர் இணையத்தில் வைரலாகி வருகிறார். இந்த நேர்காணலில் பாஜக, நடிகர் தனுஷ், நடிகர் அஜித் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆகியோரின் அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்குத் தனது டாரட் கார்டுகளைக் குலுக்கிப் போட்டு ஜெயஸ்ரீ பதிலளித்துள்ளார்.

நடிகர்களின் அரசியல் வருகை குறித்துப் பேசிய ஜெயஸ்ரீ, நடிகர் தனுஷ் அரசியலில் தடம் பதிக்கும் ஆசையோடு ஏசி டியூஷன் மையங்கள், இலவச சட்ட உதவி மையங்கள் போன்ற அடித்தளப் பணிகளைச் செய்து வந்தாலும், அவரது அரசியல் வருகையின் ஆரம்பம் நன்றாக இருக்குமே தவிர, அவரால் இறுதிவரை செல்ல முடியாது என்றும் அவர் எப்போதுமே தமிழகத்தின் முதல்வராக முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். அதேபோல், அஜித் ரசிகர்கள் அவர் 2031-ல் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்தாலும், அஜித் எப்போதுமே அரசியலுக்கு வரமாட்டார் என்றும், தமிழகத்தில் வேறு எந்தவொரு புதிய நடிகரும் முதல்வராகும் வாய்ப்பு கண்டிப்பாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

   

தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் விஜய் ஆட்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தற்போது தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைவதற்கான வாய்ப்பு இல்லை என்றார். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியைப் பிடித்தால், அவரது அரசு கவிழக்கூடிய சூழல்கள் மேலெழும் என்றும், ஆனால் அந்த நெருக்கடிகளை அவர்கள் வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தி 5 ஆண்டுகால ஆட்சியை முழுமையாக நிறைவு செய்வார்கள் என்றும் கணித்துள்ளார். மேலும், தவெகவில் விஜய்யைத் தவிர வேறு யாரும் முதல்வராகும் வாய்ப்பு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

   

இருப்பினும், தவெகவின் எதிர்காலம் குறித்த முக்கியக் எச்சரிக்கையையும் ஜெயஸ்ரீ பதிவிட்டுள்ளார். திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளைப் போல நீண்ட காலம் நிலைத்திருக்கக்கூடிய இயக்கமாகத் தமிழக வெற்றிக் கழகம் நீடிப்பது மிகவும் கடினம் என்று அவர் தனது கணிப்பில் குறிப்பிட்டுள்ளார். தனுஷின் அரசியல் ஓபனிங் சிறப்பாக இருந்தாலும் ஃபினிஷிங் சரியாக இருக்காது என்பதும், தவெக ஆட்சி கவிழும் அபாயங்களைத்தாண்டி நிலைத்து நிற்கும் என்பதும் இந்த நேர்காணலின் வாயிலாகத் தமிழக அரசியலில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.