ஹாஸ்பிடலில் திடீரென வெடித்து சிதறிய ஐபோன்…! அருகே பிறந்த குழந்தைகள்… அலறியடித்து ஓடிய மக்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

By Devi Ramu on கார்த்திகை 2, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், மருத்துவமனை காத்திருப்போர் அறையில் நோயாளி ஒருவர் கையில் வைத்திருந்த செல்போன் திடீரென பாம் போல வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் தட்டிபூர் பகுதியில் உள்ள ‘திருஷ்டி கிளினிக்’ வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் நோயாளிகள் பலர் மருத்துவர் ஆலோசனைக்காகக் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த நோயாளி ஒருவர் தனது செல்போனை கையில் வைத்துப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, அது எதிர்பாராதவிதமாகத் திடீரென வெடித்துச் சிதறிப் பயங்கரமாகத் தீப்பற்றத் தொடங்கியது.

   

பதறிப்போன அந்த நபர் போனை சோஃபாவில் தூக்கிப் போட்டதால், அங்கிருந்த சோஃபாவிலும் தீ பரவி புகை சூழ்ந்தது. அந்த இடத்தில் பிறந்த குழந்தைகளுடன் தாய்மார்களும் இருந்ததால், அங்கு பெரும் கூச்சலும் அலறலும் ஏற்பட்டு நோயாளிகள் வெளியே ஓடினர். இருப்பினும் கிளினிக் ஊழியர்கள் உடனடியாகச் செயல்பட்டுத் தண்ணீரைப் ஊற்றித் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். நல்லவேளையாக இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இந்தத் திடுக்கிடும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இணையத்தின் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது