“அவளுக்கு பாம்பை விட விஷம் அதிகம் சார்”… சின்ன மருமகள் Vs பெரிய மருமகள்… தமிழா தமிழா அரங்கத்தில் நடந்த மோதல்…!

By Nanthini on மார்கழி 21, 2025

Spread the love

தற்போது டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் மற்ற நிகழ்ச்சிகளுக்கு இருக்கும் வரவேற்பை விட விவாத நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அதன்படி தற்போது கோபிநாத் தொகுத்து வழங்கும் நீயா நானா நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அதற்குப் போட்டியாக மற்றொரு டிவியில் தமிழா தமிழா என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம் மேற்கொள்ளப்படும்.

அதன்படி இந்த வாரம் அதன்படி இந்த வாரம் சீரும் சின்ன மருமகள் மற்றும் பதுங்கும் பெரிய மருமகள் என்ற தலைப்பில் விவாதம் நடந்துள்ளது. இதில் வீட்டுக்கு வந்த சின்ன மருமகள்களின் செயல்கள் பெரிய மருமகள்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. திருமணமான மூன்று மாதத்தில் தனி குடுத்தனம் செல்லும் அளவுக்கு வந்து விடுகிறார்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதுவே பெரிய மருமகள் என்றால் மாமியார் கொடுக்கும் வேலைகள் அனைத்தும் செய்துவிட்டு தனக்கென நேரத்தை செலவிடாமல் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அது தொடர்பான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.