உடல் ஆரோக்கியத்தில் இந்த சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றணும் – இல்லேன்னா… சிக்கல்தான்!

By Elango on மார்கழி 21, 2025

Spread the love

உடல் ஆரோக்கியமே வாழ்க்கையில் பிரதானம். அதனால் நாம் சாப்பிடும் உணவில் மூன்றில் ஒரு பங்கு நார்ச்சத்து நிறைந்த மாவு சத்துகளாக இருக்க வேண்டும். இவை குறைந்த கலோரியை கொண்டவை. தினமும் குறைந்தது 5 வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

மீன் வாரத்திற்கு இருமுறையாவது உணவில் சேர்க்க வேண்டும். எண்ணெய் மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்புகள் இதயத்திற்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் ஒரு நாளைக்கு 6 கிராமுக்கு மேல் உப்பு சாப்பிடக்கூடாது. உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும்.

   

உடல்நல பிரச்சினைகளை தவிர்க்க காலை உணவை தவிர்க்காதீர்கள். வழக்கமான உடற்பயிற்சியை கடைபிடிப்பது மிகவும் அவசியம். உடல் ஆரோக்கியத்திற்கு 3 வேளை உணவை விட அதில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு மிக முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளுமாறு டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர்.