“அதிகாலை 4 மணிக்கு வந்த போன் கால்” ஓட்டுநருக்குக் கிடைத்த ரூ.3,000 டீல்… வைரல் சம்பவம்…!!

By Soundarya on மார்கழி 21, 2025

Spread the love

அதிகாலை 4 மணிக்கு ஒரு மேம்பாலத்தின் மேலிருந்து (Flyover) பிக்அப் அழைப்பு வந்ததைக் கண்டு ஓட்டுநர் வியப்படைந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ வெளியிட்டுள்ளார். பொதுவாக மேம்பாலங்களில் இது போன்ற அழைப்புகள் வருவது அரிது என்பதால் அவர் வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டார். தனது கார் பழுதாகி பாதியிலேயே நின்றுவிட்டதாகத் தெரிவித்த வாடிக்கையாளர், காரை இழுத்துச் செல்ல (Towing) உதவி கேட்கவில்லை. மாறாக, தான் ஏற்கனவே வேறொரு வாகனத்தை ஏற்பாடு செய்துவிட்டதாகவும், தற்போது பெட்ரோல் வாங்கச் செல்ல வேண்டும் என்றும் கூறினார். டாக்ஸிஓட்டுநரை சுமார் ஒரு மணி நேரம் அங்கேயே காத்திருக்கும்படி கேட்டுக்கொண்ட அந்த நபர், அதற்காக 2,000 ரூபாய் வழங்குவதாகக் கூறியுள்ளார்.

ஓட்டுநர், பழுதான ‘ஆடி’ காரை வீடியோ எடுத்து வாடிக்கையாளருக்கு அனுப்பியுள்ளார். வீடியோவைப் பார்த்து திருப்தியடைந்த வாடிக்கையாளர், மகிழ்ச்சியில் கூடுதலாக ₹500 அனுப்பியுள்ளார். பின்னர், ஓட்டுநரிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருக்க வேண்டும் எனக் கூறி, மொத்தமாக ₹3,000 வழங்குவதாக உறுதியளித்துள்ளார். ஓட்டுநர், “நீங்கள் தானாக முன்வந்து பணம் கொடுத்தால் போதும், இல்லையென்றால் முன்பு பேசிய ₹2,000 போதுமானது” என்று கூறியுள்ளார். ஆனால், குறிப்பிட்ட நேரம் காத்திருந்தால் முழுத் தொகையும் (₹3,000) கிடைக்கும் என்று வாடிக்கையாளர் வற்புறுத்தியுள்ளார்.

   

வாடிக்கையாளரின் உறுதிமொழிக்குப் பிறகு, ஓட்டுநர் அந்த காரை அங்கேயே பாதுகாப்பாகக் கண்காணித்துள்ளார். அப்போது அந்த காரின் உரிமையாளர் ஒரு நிறுவனத்தின் அதிபர் என்றும், அவரது நிறுவனம் ஹூக்கா போன்ற பொருட்களையும் தயாரிப்பதாகவும் ஓட்டுநர் அறிந்துகொண்டார்