விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த டாப் சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும் சீரியல். இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த சீரியலில் நடித்த நடிகர்கள் அனைவருமே ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்கள். அந்தவகையில் இந்த சீரியலில் நடித்தவர் தான் விஜே சங்கீதா. வசுவாக இந்த சீரியலில் நடித்தார். விஜய் சங்கீதா வேறு யாரும் கிடையாது. சன் டிவியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் வில்லியாக நடித்தவர்.
இவர் கனா காணும் காலங்கள் சீரியலில் மலர் டீச்சர் ஆகவும் பலருடைய மனதை கவர்ந்தவர். விஜேவாக இருக்கும் போது இவருடைய கண்ணக்குழி அழகு மற்றும் சிரிப்பை பார்த்து சொக்கி போன ரசிகர்கள் ஏராளமாக இருந்தார்கள். இந்த நிலையில் இவ்வாறு தன்னுடைய காதலனோடு இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது .அதாவது youtube இல் நடித்து பிரபலமான அரவிந்த் சிஜூவை இவர் காதலித்து வருகிறார்.
அரவிந்த் கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில்நடித்திருந்தார். இவர்கள் காதலித்து வந்தார்கள். இவர்களுடைய திருமணம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தற்போது அவர்கள் ஜோடியாக இருக்கும் வீடியோ வெளியிட்டு காதலை அறிவித்துள்ளார்கள்.
View this post on Instagram