தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அரசியலிலும் சினிமாவிலும் தனக்கென தனி பாதையை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் MGR.
குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் நடிகராக உயர்ந்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அபாரமாக நடிப்பை வெளிப்படுத்தியவர் MGR. இவரது படங்களில் ஆக்சன் காட்சிகள், சமூக நீதி கருத்துக்கள், திராவிட சிந்தனைகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.
தன்னை ஆதரித்தா தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர்.
MGR நல்ல குணம் படைத்த மனிதர். வாரி வழங்கும் வள்ளல். தன்னை நாடி வருபவருக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுப்பவர். அப்படிப்பட்ட எம் ஜி ஆரையே ஒரு நேரத்தில் நண்பராக இருந்த எம் ஆர் ராதாவே துப்பாக்கியால் எம்ஜிஆர் வீட்டில் இருக்கும்போது சுட்டுவிட்டார். அதற்குப் பிறகு மிகவும் கஷ்டப்பட்டு உடல்நலம் தேறி வந்தார் எம்ஜிஆர்.
பிறகு ஷூட்டிங்குக்கு வந்த எம்ஜிஆர் இயக்குனர் எவ்வளவோ சொல்லியும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் அவர் கேட்கவே இல்லை. அது என்னவென்றால் துப்பாக்கி சூடுக்கு பிறகு உடல் நலம் தேறி அவர் நடித்த படத்திற்கு டப்பிங் வேறு யாரையாவது வைத்து பேச வைக்கலாம் என்று கூறியிருக்கிறார் இயக்குனர். ஆனால் எம்ஜிஆர் எனக்கு அடிபட்டது மக்களுக்கு தெரியும் என்னைப் பற்றி எல்லாமே அறிந்த மக்களுக்கு என்னுடைய குரல் நன்றாக இல்லை என்றாலும் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் தனது சொந்த குரலில் டப்பிங் செய்தார் எம்ஜிஆர். அது பின்னாளில் அவரது அடையாளமாகவே மாறிப்போனது.