sbi

மூத்த குடிமக்களுக்கு வரபிரசாதமாக கூடுதல் வட்டி தரும் SBI வழங்கும் சிறப்பான திட்டம்… எப்படி சேரலாம் விதிமுறைகள் என்னென்ன பார்ப்போமா….?

By admin on மார்கழி 31, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் முதியவர்கள் தங்களது ஓய்வுக்குப் பிறகு எப்படி தங்களது வாழ்க்கை அமைய வேண்டும் என்பதை முன்னமே திட்டமிட்டு கொள்கின்றனர். ஓய்வுக்கு பிறகு யாருடைய உதவியும் இல்லாமல் தனிச்சையாக வாழ்வதற்கு ஏற்ற திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அப்படி முதலீடு செய்யும் போது அவர்களுக்கு மாத வருமானம் கிடைக்கும். அதன் மூலம் நல்லதொரு வாழ்க்கையை அவர்கள் நடத்தலாம். வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு சிறப்பாக வட்டியில் கொஞ்சம் கூடுதலாக தான் கொடுக்கிறார்கள். அதன்படி SBIயின் ஒரு அசத்தலான ஒரு திட்டத்தை பற்றி இனி காண்போம்.

   

மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் இல்லாதவர்களுக்கு நல்ல வட்டி வருமானம் தரும் முதலீடு திட்டங்கள் பல இருக்கின்றன. அந்த வகையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மூத்த குடிமக்களுக்கு வட்டியை அள்ளிக் கொடுக்கும் அம்ரித் விருஷ்டி திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அம்ரித் விருஷ்டி திட்டத்தை மூத்த குடிமக்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

   

இந்த திட்டத்தின் மூலம் குறுகிய காலத்தில் நல்ல வட்டி விகிதத்தில் மூத்த குடிமக்களால் வருமானம் ஈட்ட முடியும். இந்த திட்டம் கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்த நிலையில் மார்ச் 31, 2025 வரை முதலீடு செய்யலாம். அது தான் கடைசி நாளாகும். அம்ரித் விருஷ்டி திட்டம் என்பது ஒரு டேர்ம் டெபாசிட் திட்டமாகும். இதன் முதலீட்டு காலம் 444 நாட்கள்.

 

இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 7.25% வட்டி கிடைக்கும். மூத்த குடிமக்களுக்கு 7.75% வட்டி விகிதத்தின் பலனை பெறுவார்கள். உள்நாட்டு மற்றும் nri வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தின் பலனை பெறலாம். உங்கள் தேவைக்கு ஏற்ப மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டு அடிப்படையில் வட்டியை பெற்றுக் கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக 3 கோடி வரையும் குறைந்தபட்சமாக ரூபாய் 5 லட்சம் வரையும் டெபாசிட் செய்யலாம். திட்டத்தின் மொத்த காலத்திற்கு முன்னரே பணத்தை எடுத்தால் அபராதமாக ஒரு சதவீதம் பிடித்தம் செய்யப்படும். டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு எதிராக கடன் பெறலாம். டிடிஎஸ் வட்டியிலும் இது கழிக்கப்படும். SBI கிளைகள் Yono SBI மொபைல் பயன்பாடுகள் அல்லது இணைய வங்கி மூலம் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த அம்ரித் விருஷ்டி திட்டம் குறுகிய கால சேமிப்பு மற்றும் நல்ல வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ஒரு சிறந்த வழி ஆகும்.