ஜமா முதல் ஜே பேபி வரை… 2024-இல் நாம் கொண்டாட தவறிய படங்களின் லிஸ்ட்..!

By Soundarya on டிசம்பர் 31, 2024

Spread the love

2004 ஆம் வருடம் வெளியாகி தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாட தவறிய படங்கள் குறித்து பார்க்கலாம்.

#image_title

பெண் வேடமிட்டு ஆடக்கூடிய ஒரு நாடக கலைஞர்களுடைய வலி நிறைந்த வாழ்க்கையை மிகவும் அழகாகவும் எதார்த்தமாகவும் காட்டிய படம் தான் ஜமா. இந்த படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தின் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.

   
   

 

புறா பந்தயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் தான் பைரி. எந்த இடத்திலும் போர் அடிக்காமல் இருக்கும் இந்த படம் வந்ததே பலருக்கும் தெரிந்திருக்காது. இந்த படமும் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் உள்ளது.

சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நண்பர் திரைப்படம் நந்தன். அடித்தட்டு மக்கள் ஒரு அடிப்படை உரிமைகளை கூட எவ்வளவு போராடி வாங்க வேண்டி இருக்கிறது என்பதை சொன்ன படம். இந்த படமும் அமேசான் தளத்தில் வெளியாகி வருகிறது.

சதீஷ் ஹீரோவாக நடித்த திரைப்படம் சட்டம் என் கையில். கடைசி வரை சஸ்பென்ஸ் ஆக செல்லும் இந்த கிரைம்  திரில்லர் படம் அமேசான் ஓடிடி தலத்தில் உள்ளது.

விமல் மற்றும் கருணாஸ் இணைந்து நடித்த திரைப்படம் போகுமிடம் வெகு தூரமில்லை. அவர்கள் பயணிக்கும் பொழுது யாரையெல்லாம் சந்திக்கிறார்கள்?  அவர்களுக்கு என்ன ஆனது? என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மனதை வருடும் வகையில் இருக்கும். இந்த படம் அமேசான் பிரைம் ஓடிடியில் உள்ளது.

article_image6

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஹாட்ஸ்பாட். இதில் நான்கு கதைகளை சொல்லியிருப்பார். இந்த படமும் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.

article_image7

அட்டகத்தி தினேஷ் மற்றும் ஊர்வசி நடப்பதில் உருவான திரைப்படம் ஜே பேபி. எமோஷனலான ட்ராமா இந்த படம் அமேசானில் ஸ்ட்ரீம் அகி வருகிறது.

article_image8

ஹலீதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் மின்மினி. இந்த படத்தின் முதல் பாதி எடுத்து முடித்து 8 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இரண்டாம் பாதியை எடுத்தனர். மிகவும் அழகான காட்சிகளுடன் இந்த படம் உள்ளது.