smart diary

Wireless சார்ஜ், Pendrive, பவர்பேங்க்… இந்த புத்தாண்டில் அனைவரின் கவனத்தை ஈர்த்த Smart Diary…

By admin on மார்கழி 31, 2024

Spread the love

சில ஆண்டுகளுக்கு முன்பு டைரி என்பது அனைவருக்கும் நெருக்கமான ஒன்றாக இருந்தது. ஒவ்வொருத்தரின் பர்சனல் விஷயங்களை டைரியில் எழுதி வைப்பதே ஒரு பழக்கமாக வைத்திருந்தார்கள். இந்த டைரியானது பல சந்ததிகளுக்கு முன்னோர்களின் நினைவாக கூட கடந்து வந்திருக்கிறது. ஸ்மார்ட் போன்கள் வருவதற்கு முன்பு பலருக்கு குறிப்பெடுப்பதற்கு டைரி உதவும். ஒவ்வொரு புத்தாண்டுக்கும் டைரி வாங்குவது மிகவும் ஸ்பெஷல் ஆனது.

   

டைரி வாங்கி மற்றவர்களுக்கு பரிசாக கொடுப்பது போன்றவைகள் கூட நடக்கும். ஆனால் ஸ்மார்ட் போன்கள் வந்ததற்கு பிறகு டைரியின் பயன்பாடு மிகவும் குறைந்து இருக்கிறது. தற்போது ஒரு சில இடங்களில் டைரி விற்பனை ஆனாலும் கூட இந்த வருடம் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் Smart Diary என்ற ஒன்று மார்க்கெட்டில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

   

வழக்கமாக ஒரு ஆண்டு காலண்டர் உடன் வரும் டைரியை போல் இல்லாமல் இந்த டைரியை ஓர் ஆண்டுடன் நிறுத்தாமல் தொடர்ந்து மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும். மேலும் இந்த டைரியில் இளம் தலைமுறைகளை ஈர்க்கும் வகையாக பென் டிரைவ், பவர் பேங்க், வயர்லெஸ் சார்ஜிங் என சில பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. பயணம் செய்பவர்களுக்கு இந்த டைரி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

 

இந்த Smart Diary குறித்து டைரி விற்பனையாளர் கணேஷ்குமார் கூறுகையில், நாங்கள் கடந்த 30 வருடங்களாக புக் ஹவுஸ் என்ற நடத்தி வருகிறோம். புது புது டைரிகளை அறிமுகப்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதுமையாக டைரிகளை கொடுத்து வருகிறோம். ஐந்து வருடங்களுக்கு முன்பாக இருந்தே பிளாஸ்க் வைத்த டைரி, கீ செயின் வைத்த டைரி, பர்ஸ் வைத்த டைரி போன்றவற்றை கொண்டு வந்தோம். அதன் வரிசையில் தற்போது நாங்கள் ஸ்மார்ட் டைரியை கொண்டு வந்திருக்கிறோம். மக்களின் டிஜிட்டலான மைன்ட்செட்டுக்கு ஏற்றார் போல டிமைத்து இருக்கிறோம். தற்போதைய காலத்தில் மொபைல் மற்றும் லேப்டாப் அதிக மக்கள் பயன்படுத்துகிறார்கள். அப்போது பயணத்தின் போது சார்ஜ் போடுவதற்கு தனியாக பவர் பேங்க் எடுத்துச் செல்ல வேண்டும்.

இந்த Smart Diary யை வாங்கினால் அதிலேயே பவர் பேங்க் எல்லாமே வந்துவிடும். இது மட்டுமில்லாமல் பென்டிரைவ், வயர்லெஸ் சார்ஜிங், விசிட்டிங் கார்டு வைத்துக் கொள்வது போன்ற நிறைய அம்சங்கள் இதில் இருக்கிறது. இதில் வரக்கூடிய பென் டிரைவ் 16 ஜிபி திறன் கொண்டது. இதன்மேல் மொபைல் வைத்தால் போதும் அது தானாக சார்ஜ் ஏறிக்கொள்ளும். இதில் செல்போன் ஸ்டாண்டும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டைரியில் பக்கங்களில் டேட் இல்லாமல் வரும். அதனால் டைரி முடிவடைந்த பிறகு பக்கங்களை மட்டும் தனியாக வாங்கி இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது போன்ற டைரிகள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் மற்றும் பெரிய பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு புத்தாண்டு பரிசாக கொடுப்பதற்காக இந்த டைரியை நாங்கள் அனுப்பி வருகிறோம். பலருக்கு இந்த டைரியும் பிடித்திருக்கிறது என்று கூறுகிறார் கணேஷ்குமார். புதுமைகள் என்பது மாறாத விஷயம் அந்த வரிசையில் இந்த ஸ்மார்ட் டைரியை மக்கள் அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர். விருப்பத்துடன் உடன் வாங்கியும் செல்கின்றனர்.