ஷோபனா பிரபலமான இந்திய நடிகை மற்றும் பரதநாட்டிய கலைஞர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கில படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் திருவாங்ரூர் சகோதரிகள் என்று அழைக்கப்படும் லலிதா, பத்மினி மற்றும் ராகினி ஆகியோரின் மருமகள் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்தவர் ஷோபனா. 1980 ஆம் ஆண்டு மங்களநாயகி என்ற திரைப்படத்தில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். ஷோபனா. எனக்குள் ஒருவன் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகி ஆனார் ஷோபனா.
தொடர்ந்து ஒரே தாய் ஒரே குலம், காதல் கீதம், இது நம்ம ஆளு, பாட்டுக்கு ஒரு தலைவன், வாத்தியார் வீட்டு பிள்ளை, என்கிட்ட மோதாதே, தளபதி, கோச்சடையான் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் ஷோபனா.1980கள் காலகட்டத்தில் மிகப் பிரபலமான புகழ்பெற்ற நடிகையாக வலம் வந்தவர் ஷோபனா. பாக்யராஜ் உடன் இவர் நடித்த இது நம்ம ஆளு ரஜினிகாந்த் நடித்த தளபதி போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
மேலும் இவர் மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் அதிகப்படியான படங்களில் நடித்துள்ளார் ஷோபனா. நடிப்பையும் தாண்டி ஷோபனா ஒரு அற்புதமான பரதநாட்டிய கலைஞர். இவரின் நடிப்பு முகபாவனைகள் ஆடல் என அனைத்திலும் ஒரு நளினம் இருக்கும். அதனாலேயே பல ரசிகர்களை கொண்டவர்.
தன் வாழ்க்கையையே பரதநாட்டியத்திற்காக அர்ப்பணித்தவர் ஷோபனா. அதற்காக இவர் திருமணம் செய்து கொள்ளவே இல்லை. இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஷோபனா, “தமிழில் கரகாட்டக்காரன், மலையாளத்தில் திரிஷ்யம் இந்த 2 படத்லயும் நடிக்க வாய்ப்பு வந்து நான் மிஸ் பண்ணிட்டேன்” என்று கூறியுள்ளார்.