BREAKING: திடீர் உடல் நலக்குறைவு.. மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் துரைமுருகன்..!

By Nanthini on ஆனி 6, 2025

Spread the love

திமுகவின் மூத்த தலைவரும் தற்போதைய தமிழ்நாடு அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் சளி தொந்தரவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது அவருக்கு இலாகா மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில் அவருடைய உடல்நிலை குறித்த செய்திகள் பரவியது.

தற்போது மீண்டும் அவர் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று காய்ச்சல் காரணமாக சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் துரைமுருகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் அவருடைய உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ மருத்துவர் இதுவரை வெளியாகவில்லை.