இவர் தான்பா பிழைக்க தெரிஞ்ச மனுஷன்.. ஆட்டோ ஓட்டாமலேயே மாதம் 8 லட்சம் சம்பாதிக்கும் டிரைவர்..!

By Nanthini on ஆனி 6, 2025

Spread the love

இந்த உலகை பொருத்தவரையில் பெரும்பாலானோர் என்னதான் வேர்க்க விறுவிறுக்க உழைத்தாலும் அதற்கு சரியான வருமானத்தை பெறாமல் இருப்பார்கள். ஆனால் ஒரு சிலர் ஸ்மார்ட் ஆக யோசித்து வேலையே செய்யாமல் அதிக வருமானத்தை சம்பாதித்து விடுகிறார்கள். அப்படிதான் மும்பையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் செய்துள்ள வேலை அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது அமெரிக்க தூதரகத்திற்கு வரும் விசா விண்ணப்பதாரர்கள் உள்ளே பைகளை கொண்டு செல்ல முடியாததால் அந்த பைகளை வைக்க ஏதாவது ஒரு இடத்தை தேடுகின்றனர். அப்படி பிரபல நிறுவனமான லென்ஸ் கார்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ராகுல் ரூபாணி அமெரிக்க தூதரகத்திற்கு சென்ற போது நடந்த ஒரு சம்பவத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

அதில் விசா விண்ணப்பிப்பதற்காக நான் அமெரிக்க தூதரகம் செல்ல வேண்டியிருந்தபோது பாதுகாப்பு அதிகாரிகள் என் பையை உள்ளே அனுமதிக்கவில்லை. என்ன செய்வது என்று யோசித்தபோது அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் பையை என்னிடம் தாருங்கள் நான் பத்திரமாக வைத்துக் கொள்கிறேன், ஆனால் ஆயிரம் ரூபாய் அதற்கான கட்டணம் என்று கூறினார். நான் முதலில் தயங்கிய பிறகு கொடுத்து விட்டேன். பிறகு தான் தெரிந்தது இது ஒரு அற்புதமான பிசினஸ் . அந்த ஆட்டோ ஓட்டுனர் இது போன்று நாள் ஒன்றுக்கு 30 பேரின் உடமைகளை பாதுகாத்து மாதம் ஒன்றுக்கு 5 லட்சம் முதல் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டி வருகின்றார். அதுவும் ஆட்டோ ஓட்டாமலேயே அவர் நன்றாக சம்பாதிக்கின்றார் என அந்த நபர் தெரிவித்துள்ளார்.