chicken

தமிழ்நாட்டில் கண்டுபிடித்த சிக்கன் 65 ஐ இன்று உலகமே திரும்பி பாக்குது … காரணம் தெரிஞ்சா ஆச்சர்யபடுவீங்க…

By admin on மார்கழி 3, 2024

Spread the love

உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரதானமானது உணவு. சாப்பாடு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. விதவிதமான ருசிகளில் பல வகையான உணவுகளை விரும்பி சாப்பிடும் பலர் இங்கு இருக்கிறார்கள். இவ்வுலகில் இருக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது சிக்கன் தான். அசைவ பிரியர்களுக்கு பொறித்தது என்றால் அது சிக்கன் தான் ஞாபகத்துக்கு வரும்.

   

இந்த சிக்கன் 65 எனப்படும் பொறித்த சிக்கன் எப்படி இந்த பெயர் வந்தது யார் கண்டுபிடித்தது தெரியுமா? 1965 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள புகாரி ஹோட்டலில் உரிமையாளர் ஏ. எம். புகாரி என்பவரால் தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.

   

அவர் 1965 ஆம் ஆண்டு இந்த சிக்கன் பொறித்ததை கண்டுபிடித்ததால் தான் இதை சிக்கன் 65 என்று கூறுகிறார்கள். சிக்கன் 65 என்ற உணவின் பிறப்பிடமே தமிழ்நாடு தான். ஆனால் இது உலக ஃபேமஸ் ஆகும்.

 

அது இன்று நிரூபணம் ஆகி இருக்கிறது. டேஸ்ட் அட்லஸ் வெளியிட்டுள்ள உலகத்தின் டாப் 10 சிக்கன் பொறித்த உணவுகளில் தமிழ்நாட்டில் உருவான சிக்கன் 65 மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கிறது. இது உலக மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. முதல் இடத்தில் தென்கொரியாவின் சிக்கின் என்ற பொறித்த சிக்கன் உணவு பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.