தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை மற்றும் கோடை விடுமுறை சமயத்தில் புது புது படங்கள் வெளியாவது வழக்கம். அதனைப் போலவே காதலர் தினத்தை குறி வைத்து புதிய திரைப்படங்களும் வெளியாகும். குறிப்பாக வித்தியாசமான காதல் கதையை கொண்ட திரைப்படங்களை உருவாக்கி காதலர் தினத்தன்று வெளியிட்டு அதன் மூலம் பல தயாரிப்பாளர்கள் கல்லா கட்டுவார்கள். தமிழ் சினிமாவில் எண்பதுகளில் பெரும்பாலும் காதல் திரைப்படங்கள்தான் உருவானது. அனைத்து நடிகர்களும் கதாநாயகியை உருகி உருகி காதல் செய்வார்கள்.

அந்த காதல் கதையின் பிரிவு மற்றும் சோகம் என அனைத்துமே காட்டப்படும். பெரும்பாலான திரைப்படங்களில் காதலர்கள் ஒன்று சேராமல் பிரிவது போல காட்டி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்துவார்கள். நடிகர் முரளி வந்த பிறகு இதயம் போன்ற பல காதல் திரைப்படங்கள் வெளியானது. ஒரு டஜன் காதல் கதைகளில் முரளியின் நடித்திருப்பார். இப்போதெல்லாம் நிறைய ஆக்சன் படங்கள் உருவாகி வருகின்றன. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி ஆன காதலர் தினத்தன்று என்னென்ன காதல் திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

இதில் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் தான் தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படம். இந்த திரைப்படத்தில் தனுஷின் சகோதரி மகன் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்ற கோல்டன் ஸ்பேரோ பாடல் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

அடுத்ததாக ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் எக்ஸ் என்ற திரைப்படமும் காதலர் தினத்தன்று வெளியாக உள்ளது. அடுத்ததாக கவின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ் திரைப்படமும் காதலர் தினத்தை குறி வைத்து வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தை நடன இயக்குனர் சதீஷ் இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் தற்போது மாற்றப்பட்டிருப்பதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
