eagles

அழிந்து வரும் கழுகுகள்… மனித உயிருக்கு ஆபத்து… இரண்டிற்கும் என்ன சம்பந்தம்…?

By admin on மார்கழி 3, 2024

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மனிதர்களால் எல்லாமே மாறிவிட்டது. தன்னலனும் சமூக நலனும் உலக நலனும் இல்லாமல் இருக்கிறார்கள் மனிதர்கள் என்றே சொல்லலாம். பாஸ்ட் புட் மோகத்தால் உடல் நலனில் அக்கறை கொள்ளாமல் பல வித நோய்கள் இளம் வயது மரணங்கள் ஏற்படுகிறது. வீடு கட்ட வேண்டும் என்பதற்காக மரத்தை எல்லாம் அழிக்கிறார்கள். இதனால் இயற்கை வளம் பாதிக்கப்படுகிறது. இதனாலேயே பேரிடர்கள் ஏற்படுகிறது.

   

மனிதர்களின் செயல்களால் பாதிப்பு அனைத்து ஜீவராசிகளுக்கும் தான். இந்த காலநிலை மாற்றத்தால் உலகில் சிறிய சிறிய ஜீவராசிகள் கூட அதில் உயிர் பிழைக்க முடியாமல் அழிவை நோக்கி செல்கின்றது. அப்படி தற்போது பூமி வெப்பமயமாகுதல் மாசுபடுதல் போன்ற பல காலநிலை மாற்றத்தின் காரணமாக கழுகுகள் எண்ணிக்கை குறைந்து அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.

   

கழுகுகள் ழிவை நோக்கி செல்லும் போது அது மனித உயிர்களுக்கு ஆபத்தான ஒரு நிகழ்வாக தான் இருக்கும். கழுகுகள் வேட்டையாடி சாப்பிடும் விலங்குகள் பெரும்பாலும் மனிதர்களுக்கு தொந்தரவு தரக்கூடியவை ஆகும். உலகம் முழுவதும் ஏராளமான கழுகுகள் இருந்தாலும் அவற்றின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகியிருக்கிறது. உலகில் 23 வகையான கழுகுகள் இருக்கின்றன. இவற்றில் 16 வகைகள் ஆசியாவில் தான் வாழ்கின்றன.

 

1990களில் எடுக்கப்பட்ட ஆய்வில் உலகம் முழுவதும் சுமார் 5 கோடி கழுகுகள் இருந்திருக்கின்றது. ஆனால் அது போக போக இந்த எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்திருக்கிறது. தற்போது ஐந்தாண்டு கணக்கெடுப்புகளை பார்க்கும்போது சுமார் 5 லட்சம் கழுகுகள் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியிருக்கிறது. மனிதர்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் தொற்று நோய்களை பரப்பும் எலி சில பறவைகள் மற்றும் மனித உயிர்களை கொல்லக் கூடிய பாம்புகள் போன்றவற்றை கழுகுகள் வேட்டையாடி சாப்பிடுகின்றன.

கழுகுகளின் எண்ணிக்கை குறைவது மக்கள் மத்தியில் தொற்று நோய் அதிகரித்து உயிரிழப்புக்கு காரணமாக அமைகிறது. இந்த ஆய்வு தகவலை அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் வெளியிட்டுள்ளனர். அதனால் மனிதர்கள் இனி இயற்கையை பாதுகாக்க வேண்டும். பல உயிரினங்களையும் காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் மனிதர்களும் நல்லதொரு வாழ்க்கை வாழ முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.