தமிழக அரசியலில் மிகவும் பிஸியான நபராக இருந்து வருகிறார் தமிழிசை சௌந்தர்ராஜன். தமிழக பாஜகவின் தலைவராக இருந்த அவர் பின்னர் தெலங்கானா ஆளுநர் ஆக்கப்பட்டார். அதன் பின்னர் பாண்டிச்சேரிக்கும் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இடையில் மக்களவைத் தேர்தல் வந்ததால் அவர் ஆளுநர் பொறுப்பை துறந்துவிட்டு வந்து தேர்தலில் நின்று தோல்வியடைந்தார். தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு மருத்துவர். தமிழகத்தில் பாஜகவை வளர்த்ததில் தமிழிசையின் பங்கு அளப்பரியது.
கட்சிக்காக எதையாவது பேசி அவர் ட்ரால் மெட்டீரியல் ஆகினாலும், தமிழக பாஜக தலைவராக அவர் இருந்தபோதுதான் பாஜக புகழ் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது. இடையில் அவரின் உயரத்தையும், ஹேர் ஸ்டைலையும் வைத்தெல்லாம் அவர் பாடி ஷேமிங் செய்யப்பட்டார். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் அவர் தீவிரமாக அரசியலில் இறங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

#image_title
இந்நிலையில் அரசியல் மட்டுமில்லாமல் சினிமாவிலும் கால்பதித்துள்ளார் தமிழிசை என்பது பலரும் அறியாதது. மஞ்சள் வீரன் புகழ் இயக்குனர் செல்அம் இயக்கத்தில் உருவான முதல் திரைப்படமான திரு வி க பூங்கா எனும் படத்தில் அவர் என்னைப் பெற்ற தெய்வமே என்ற பாடலை எழுதியுள்ளார். அந்த பாடல் ஒரு தந்தைக்கும் மகளுக்குமிடையிலான உறவைப் பேசும் பாடலாக அமைந்துள்ள்ளது.
இந்த பாடல் பற்றி பேசியுள்ள தமிழிசை “இயக்குனர் செல்அம் என்னுடைய எதுகை மோனை பேச்சு எல்லாம் பிடிக்கும் என்று சொல்லி என்னை ஒரு பாடல் எழுத வைத்தார். நான் அதிக நேரமெடுத்துக் கொள்ளாமல் எழுதிக் கொடுத்தேன். அவர் நான் எதிர்காலத்தில் பாடல் ஆசிரியராக வரவேண்டும் என்றார். அதற்கான காலமும் நேரமும் வரவில்லை. பன்ச்களை பன்ச் பண்ண தயாராகதான் இருக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
