தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் லப்பர் பந்து திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாதிக்கா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்டார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லப்பர் பந்து திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
220 தியேட்டர்களில் ரிலீசான லப்பர் பந்து திரைப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளதால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் ஒன்று என பெயர் வாங்கியுள்ளது. இந்த நிலையில் லப்பர் பந்து படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளர் தனது அடுத்த படத்தையும் நீங்கள் தான் இயக்க வேண்டும் என தமிழரசனிடம் கூறியுள்ளார்.
ஆனால் தமிழரசன் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம். அதற்கு காரணம் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அதிக பிரச்சனைகள் வந்துள்ளது. அதனை சமாளிக்க முடியாமல் தமிழரசன் கஷ்டப்பட்டுள்ளார். சொல்லப்போனால் சூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனரும் தயாரிப்பாளரும் பேசவே இல்லையாம்.
இப்போது படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் தயாரிப்பாளர் தமிழரசனிடம் அடுத்த படத்தை இயக்குமாறு கூறியுள்ளார். ஆனால் தமிழரசன் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டு ஆகாஷ் பாஸ்கரன் என்ற தயாரிப்பாளரின் படத்தை இயக்க கமிட்டாகி உள்ளாராம். அந்தப் படத்தை இயக்க தமிழரசன் பச்சமுத்துவுக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.