நடிப்பு ஒர்க் அவுட் ஆகாததால் புது அவதாரம் எடுக்கும் அதர்வா.. அப்பா பெயரை காப்பாற்ற துடிக்கும் வாரிசு நடிகர்..!!

By Priya Ram on செப்டம்பர் 21, 2024

Spread the love

பிரபல நடிகரான முரளியின் மகன்தான் அதர்வா. இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு ரிலீசான பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன்பிறகு 2012-ஆம் ஆண்டு ரிலீசான முப்பொழுதும் உன் கற்பனைகள் திரைப்படத்தில் நடித்தார்.

   

அதர்வாவுக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது பரதேசி திரைப்படம் தான். இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதனை தொடர்ந்து இரும்பு குதிரை, சண்டிவீரன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் அதர்வா நடித்துள்ளார். குறுகிய காலகட்டத்திலேயே முரளி சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்.

   

 

ஆனால் அதர்வா சமீபத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படத்திலும் நடிக்கவில்லை. அதர்வா நடிக்கும் படங்கள் மக்களிடையே சரியான வரவேற்பை பெறவில்லை. இதனால் நடிப்புக்கு பிரேக் எடுத்து படங்களை இயக்கலாம் என அதர்வா முடிவு செய்துள்ளாராம். இதற்காக அடையாரில் ஒரு அலுவலகத்தை நிறுவி உள்ளார்.

மேலும் கதை உருவாக்கும் பணிகளில் அதர்வா தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம். ஒருவேளை அதர்வா படத்தை இயக்கினால் அந்த படத்தில் அவரது சகோதரனும், முரளியின் இளைய மகனுமான ஆகாஷ் நடிப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லை என்றால் அதர்வாவே அதில் ஹீரோவாக நடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

author avatar
Priya Ram