பிரபல நடிகையான ராணி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். வம்சம், நந்தினி, சீதாராமன் உள்ளிட்ட தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். ஜெமினி திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து ஓ போடு பாடலுக்கு ராணி குத்தாட்டம் போட்டார்.
அது மட்டுமில்லாமல் சரத்குமார் நடித்த நாட்டாமை திரைப்படத்தில் டீச்சர் கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். ராணிக்கு ஹீரோயின் ஆக வேண்டும் என ஆசை. ராமராஜன் உடன் இணைந்து வில்லுப்பாட்டு என்ற படத்தில் ராணி நடித்தார். ஆனால் ஒரு சில காரணங்களால் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளிக்கொண்டே போனது.
இதனால் ராணி டான்சராக மாறிவிட்டார். துணை கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் ராணி ஹீரோயின் ஆக வேண்டும் என்ற ஆசையை தனது மகள் மூலமாக நிறைவேற்றிக் கொண்டார். ராணியின் மகள் தார்னிகா ஹீரோயினாக அறிமுகமாகிறார். பொன் ராம் இயக்கத்தில் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த திரை படத்தில் தார்னிகா ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். சரத்குமாரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் பொன் ராம். அவரது இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் படமும் சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.