சினிமாவில் அஜித்தும் ஷாலினியும் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். இயக்குனர் சரண் இயக்கத்தில் அமர்க்களம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த திரைப்படத்தில் அஜித்தும் ஷாலினியும் இணைந்து நடித்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். அமர்க்களம் திரைப்படம் 1999-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மக்களுடைய சமூக வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ரகுவரன், நாசர், அம்பிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
அமர்க்களம் திரைப்படத்தில் பிரபல டப்பிங் கலைஞரான ஸ்ரீஜா ரவி ஷாலினிக்கு டப்பிங் பேசியுள்ளார். ஒரு முறை அஜித் டப்பிங் கலைஞரான ஸ்ரீஜாவிடம் எனது வருங்கால மனைவிக்கு டப்பிங் பேசியதற்கு மிகவும் நன்றி என ஸ்ரீஜாவிடம் கூறியுள்ளார். ஷாலினி மீதான காதலை நாசூக்காக ஸ்ரீஜாவிடம் அஜித் கூறியுள்ளார்.
அதனை கேட்டு ஸ்ரீஜா ஷாக் ஆகி விட்டாராம். ஸ்ரீஜாவின் மகளான ரவீனாவும் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார். இவர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படத்தில் நடித்தார். அந்த படத்தில் பிரதீப் ரங்க நாதனின் அக்கா கதாபாத்திரத்தில் ரவீணா நடித்துள்ளார். மேலும் ஒரு சில படங்களில் சிறிய கதாபாத்திரத்திலும் ரவீனா நடித்துள்ளார்.