அந்த விஷயத்துல என் தம்பிய அடிச்சுக்கவே முடியாது, அதுக்கு நானே தீவிர ரசிகன்.. ஜெயம் ரவியை புகழ்ந்த மோகன் ராஜா..!

By Nanthini on புரட்டாதி 22, 2024

Spread the love

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் முதலில் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நிலையில், கமல்ஹாசன் நாயகனாக நடித்த ஆளவந்தான் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பிறகு திடீரென ஹீரோவாக அறிமுகமாகி இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இவர் முதன்முதலில் ஜெயம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவரை அனைவரும் ஜெயம் ரவி என தான் அழைத்தனர். தொடர்ந்து பழமொழிகளில் ஹிட்டான படங்களை எடுத்து ரீமேக் செய்து தனது அண்ணன் ராஜாவுடன் சேர்ந்து ஜெயம் ரவி நடித்து வந்தார்.

   

அதன்படி எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். பிறகு பிற இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க தொடங்கி உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். குறிப்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்த ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி தற்போது பிரதர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

   

 

இந்த விழாவில் ஜெயம் ரவி, அவருடைய அண்ணன் மோகன் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், பூமிகா, மாளவிகா மேனன் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா தனது தம்பி குறித்து புகழ்ந்து தள்ளினார். அதில், நான் அவ்வளவு சீக்கிரம் யாரையும் குறிப்பிட்டு பாராட்ட மாட்டேன். என் தம்பியை எனக்கு மிகவும் பிடிக்கும். அவனுடைய நடனத்திற்கு நான் அடிமை. இன்றும் நான் அடித்து கூறுவேன் தமிழ் சினிமாவில் டாப் 5 இல் நடனத்தில் என்னுடைய தம்பியும் ஒருவன் என்று. அவனுக்கு குடும்பத்தை விட சினிமா மீதுதான் அவ்வளவு ஆசை. அந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் கொண்டவன். உங்களுடைய ஆதரவால் அவன் மேலும் மேலும் வளர வேண்டும் என்று மோகன் ராஜா மேடையில் பேசினார்.