வெளிநாடுகள்ல ஷூட்டிங் போகும் போது கண்டிப்பா இதை செஞ்சிடுவேன்… ரகசியத்தை உடைத்த சத்யராஜ்…

By Meena on செப்டம்பர் 21, 2024

Spread the love

கோயம்புத்தூரை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது இயற்பெயர் ரங்கராஜ் சுப்பையா என்பதாகும். சிறுவயதிலிருந்தே சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்தவர் சத்யராஜ். எம் ஜி ஆர் அவர்களின் சிலையை வீட்டில் வைத்து இருந்திருக்கிறார் சத்யராஜ். இது மட்டுமல்லாமல் நடிகர் ரமேஷ் கண்ணாவின் தீவிர ரசிகர் சத்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

   

படிப்பை முடித்த பிறகு சத்யராஜின் கனவு நடிகராக வேண்டும் என்று இருந்தது. ஆனால் அவரது தாயார் அதை எதிர்த்தார். இருந்தாலும் வீட்டின் எதிர்ப்பை மீறி சென்னை கோடம்பாக்கத்திற்கு குடி பெயர்ந்தார் சத்யராஜ். பின்னர் கோமதி சாமிநாதன் அவர்களின் நாடக குழுவில் சேர்ந்தார். சத்யராஜ் 1978 ஆம் ஆண்டு சட்டம் என் கையில் என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான சத்யராஜ். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

   

சிறிது காலம் தயாரிப்பு மேலாளராக பணிபுரிந்தார் சத்யராஜ். அடுத்ததாக 1985 ஆம் ஆண்டு சாவி என்ற திரைப்படத்தில் டித்து நாயகனாக அறிமுகமானார். இது நல்ல விமர்சங்களை பெற்று வெற்றி பெற்றது.

 

1978 முதல் 1985 வரை சுமார் 75 படங்களில் நடித்திருப்பார் சத்யராஜ். ஆனால் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் சத்யராஜ். 1983 க்கு பிறகு சத்யராஜ் அவர்களின் கல்லூரி கால நண்பர் மணிவண்ணன் அவர்கள் சினிமாவிற்குள் நுழைந்தார்.

1984 முதல் 2013 வரை சத்யராஜ் அவர்களை வைத்து சுமார் 25 படங்கள் அவரை நாயகனாக வைத்து இயக்கி பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார் மணிண்ணன். 1978 முதல் இன்றளவும் சத்யராஜ் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பாகுபலி திரைப்படத்தில் நடித்ததற்கு பிறகு பான் இந்தியா நடிகராகவும் சத்யராஜ் வலம் வந்து கொண்டிருக்கிறார். பல படங்களில் கமிட்டாகி பிஸியாக இருந்து கொண்டிருக்கும் சத்யராஜ் வெளிநாடுகளுக்கு செல்லும் போது தான் இந்த விஷயத்தை தவறாமல் செய்து விடுவதாக ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார்.

அவர் கூறியது என்னவென்றால், ஒவ்வொருவரும் வெளிநாட்டிற்கு சூட்டிங் போகும்போது நம்ம ஊரு சாப்பாடு கிடைக்கலையே அப்படின்னு வருத்தப்படுவாங்க. ஆனா நான் அப்படிப்பட்ட ஆள் இல்ல. எந்த நாட்டுக்கு போனாலும் அந்த நாட்டு சாப்பாடு தான் சாப்பிடுவேன். ரஷ்யா சைனா எங்க போனாலும் சூட்டிங் முடிஞ்ச பிறகு சாயங்கால நேரம் ஃப்ரீயா இருந்தா அப்படியே தெருவில் நடந்து போய் ஸ்ட்ரீட் ஃபுட்ஸ் எல்லாத்தையுமே சாப்பிட்டு ட்ரை பண்ணுவேன். நான் எல்லா சாப்பாடுமே வஞ்சனை இல்லாமல் சாப்பிடுவேன். அப்படி ஒரு தடவை தவளை லெக் பீஸ் எல்லாம் சாப்பிட்டு இருக்கேன். அது நல்லா டேஸ்ட்டா இருக்கும் என்று ரகசியத்தை பகிர்ந்து இருக்கிறார் சத்யராஜ்.