அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அறிவித்தது தமிழக அரசு….!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு அட்டவணையை வெளியிட்ட பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான விடுமுறை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் அனைவருக்கும் டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கிய டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெற உள்ளது. டிசம்பர் 23ஆம் தேதி இன்று மாணவர்களுக்கு தேர்வுகள் நிறைவடையும் நிலையில் இதனை தொடர்ந்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 ஆம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் விடுமுறையாகும்.

அதன் பிறகு பத்து நாட்களில் பொங்கல் பண்டிகை வருகிறது. அப்போதும் மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூர் செல்பவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.