தமிழகத்தில் இனி பத்திரப்பதிவு செய்வதற்காக சார்பதிவாளர் அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் இருந்து கொண்டே பத்திரப்பதிவு செய்வதற்கு ஸ்டார் 3.0 என்ற புதிய திட்ட மூலம் புதிய மென்பொருளை தமிழக அரசை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய முறையில் சொத்து வாங்குவோர் மற்றும் விற்பனை செய்பவர்கள் அவர்களின் விவரங்களை உள்ளிட்ட பிறகு ஓடிபி வரும். இதனை பதிவு செய்த பிறகு விரல் ரேகையை பதிவு செய்து பத்திரத்தை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரும் 10 நிமிடத்தில் இந்த வேலை முடிந்து விடும்.
