இளைஞர்களே ரெடியா?… போக்குவரத்து துறையில் 3000 பேருக்கு வேலை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 5, 2025

Spread the love

தமிழகத்தில் போக்குவரத்து துறை விரைவில் 3000 பேருக்கு வேலை வழங்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பள்ளி கல்லூரிகளுக்கு தேவையான கூடுதல் பேருந்து வசதியை ஏற்படுத்தி தர முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். தேவைப்படும் இடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்படும். புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டங்களால் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது.

சென்னையில் உள்ள 85 பள்ளிகளின் மாணவ மாணவிகள் பயன்பெறும் விதமாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நிறைவடைந்ததும் மாதம் தோறும் மின் கட்டணம் கணக்கீட்டு முறை செயல்படுத்தப்படும். போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விரைவில் 3000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.