திருச்சி மாவட்டம் ரேஸ்கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அமைந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இந்த இடம் கடந்த 1994-ஆம் ஆண்டு 30 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் எஸ்.ஆர்.எம் நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. அந்த குத்தகை தொகையாக 47. 93 கோடி ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதுவரை அந்த நிறுவனத்தினர் 9.08 கோடி ரூபாய் மட்டுமே பணத்தை கொடுத்துள்ளனர். மீதமுள்ள 38.85 கோடி ரூபாய் பணத்தை கொடுக்காமல் இருந்தனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி குத்தகை ஆண்டு காலம் முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினர் ஹோட்டலை கையகப்படுத்த சென்றனர். அப்போது ஹோட்டல் நிர்வாகத்தினர் வாக்குவாதம் செய்ததால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம் ஹோட்டலை கையகப்படுத்த தடை விதித்து, எஸ்.ஆர்.எம் நிர்வாகத்திற்கு கால அவகாசம் கொடுத்தது.
அந்த அவகாசமும் முடிந்த நிலையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக தலைமை அதிகாரி வெங்கடேசன், திருச்சி மண்டல மேலாளர் பிரபுதாஸ் தலைமையில் அதிகாரிகள் நேற்று அந்த ஹோட்டலை கையகப்படுத்தினர். முன்னதாக அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஹோட்டல் முன் பகுதியில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தினர் தங்களது லோகோவை ஒட்டியுள்ளனர்.
அங்குள்ள விருந்தினர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹோட்டல் தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. அந்த ஹோட்டலில் வேலை பார்ப்பவர்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாத படி தொடர்ச்சியாக அவர்களை பணியில் ஈடுபட சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கால அவகாசம் கேட்டு எஸ்.ஆர்.எம் நிர்வாகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…
ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…
நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…
அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…