குஷியோ குஷி… பள்ளி மாணவர்களுக்கு 8 நாட்கள் விடுமுறை… தமிழக அரசு அறிவிப்பு…!

By Visaka on ஆடி 5, 2026

Spread the love

தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டு தொடங்கி வகுப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடப்பு ஜூலை மாதத்தில் பள்ளி மாணவர்களுக்குப் பொது விடுமுறை நாட்கள் எதுவும் இல்லை என்ற தகவல் மாணவர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் மொஹரம் பண்டிகைக்காக ஒரு நாள் அரசு விடுமுறை கிடைத்ததோடு, வார இறுதி நாட்களையும் சேர்த்து மொத்தம் 12 நாட்கள் விடுமுறை கிடைத்தது. ஆனால், இந்த ஜூலை மாதத்தைப் பொறுத்தவரை எந்தவொரு அரசுப் பொது விடுமுறையும் இல்லாததால், மாணவர்கள் தங்களின் முதல் பருவத் தேர்வுகளுக்குத் தீவிரமாகத் தயாராக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்த மாதத்தில் மாணவர்களுக்கு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டுமே விடுமுறை நாட்களாக அமையவுள்ளன. அதன்படி ஜூலை 4, 5, 11, 12, 18, 19, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் வரும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளை உள்ளடக்கி மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை கிடைக்கிறது. பண்டிகை அல்லது அரசு விடுமுறை என ஒரு நாள் கூட கூடுதலாகக் கிடைக்காமல், வெறும் 8 நாட்கள் மட்டுமே விடுப்பு வருவதால் மாணவர்கள் மத்தியில் சிறு சோகம் நிலவினாலும், ஆசிரியர்கள் இந்த நாட்களைப் பயன்படுத்தி பாடத்திட்டங்களை விரைவாக முடித்து தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்தி வருகின்றனர்.