தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு… பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன் தரும் தமிழக அரசு… தஞ்சாவூர் ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அப்டேட்…!

By SATHISH R on ஆடி 5, 2026

Spread the love

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோருக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. தமிழக அரசின் ‘தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ மூலம் பெண்கள் புதிய தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரேவதி அவர்கள் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதாகும். இக்கடனுதவியுடன் சேர்த்து, தொழிலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற அனைத்து வழிகாட்டுதல்களும் அரசுத் தரப்பில் இருந்து வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 18 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே தகுதியானவர்கள். மக்கும் பொருட்கள் தயாரிப்பு, தென்னைநார் பொருட்கள், ஆடை வடிவமைப்பு, வீட்டில் தயாரிக்கும் உணவுப் பொருட்கள், அழகுநிலையம் உடற்பயிற்சி நிலையம் மற்றும் சலவை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சுயதொழில்களுக்கு இக்கடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக, சத்துமாவு சார்ந்த பேக்கரி பொருட்கள், எலுமிச்சை மற்றும் வெட்டிவேர் எண்ணெய் தயாரிப்பு போன்ற தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு 25 சதவீத மானியத்துடன் வங்கிக் கடன் பெற்றுத் தரப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

   

இத்திட்டத்தில் இணைந்து பயன்பெற விருப்பமுள்ள தகுதியான பெண்கள் தங்களின் புகைப்படம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச் சான்றிதழ் மற்றும் தொடங்கவிருக்கும் தொழிலுக்கான திட்ட மதிப்பீட்டு விலைப்புள்ளிப் பட்டியல் ஆகிய ஆவணங்களுடன் www.msmeonline.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த கூடுதல் விபரங்களை அறிய விரும்புவோர், தஞ்சாவூரில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் தொடர்பு கொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.