FLASE NEWS:6-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்… இனிமேல் தனி கம்ப்யூட்டர் பாடம்… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!

By Visaka on ஆடி 30, 2026

Spread the love

பள்ளி மாணவர்களிடையே தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், வரும் கல்வியாண்டு முதல் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு தனியாக கணினி அறிவியல் பாடப்புத்தகம் அறிமுகப்படுத்தப்படும் என்று அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். பள்ளி சேர்க்கை மற்றும் கல்வித் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்த தொடர் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இளம் வயதிலேயே மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப அறிவு, கணினி பயன்பாடு மற்றும் டிஜிட்டல் திறன்கள் எளிதில் சென்று சேரும் என்றும், எதிர்கால சவால்களை அவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இது பெரிதும் உதவும் என்றும் கல்வி வட்டாரங்கள் கருத்துத் தெரிவிக்கின்றன.