காங்கிரஸ் கோட்டையில் குண்டு வீசிய ராகுல் காந்தி… அந்த ஒரு சீட் யாருக்கு?… ஆடிப்போய் கிடக்கும் தமிழக காங்கிரஸ் சீனியர்கள்..!!!

By Rajeshwari on பங்குனி 1, 2026

Spread the love

தமிழகத்தில் காலியாகும் ராஜ்யசபா இடங்களுக்காக திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படவுள்ள ஒரே ஒரு இடத்தைப் பிடிக்க அந்த கட்சியின் மூத்த தலைவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் மாநிலத் தலைவர்களான திருநாவுக்கரசர், கே.எஸ். அழகிரி மற்றும் கே.வி. தங்கபாலு ஆகியோர் இந்த வாய்ப்பைப் பெற டெல்லி மேலிடத்தை தீவிரமாக அணுகி வருகின்றனர்.

இது குறிப்பாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட திருநாவுக்கரசர், இம்முறை எப்படியாவது மாநிலங்களவை உறுப்பினராகிவிட வேண்டும் என்பதில் முனைப்பு காட்டி வருகிறார். இருப்பினும், மூத்த தலைவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் மேலிடம் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

   

மேலும் மறுபுறம், ராகுல் காந்தி தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பதில், அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவை தமிழகம் சார்பில் ராஜ்யசபாவிற்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய அளவில் கட்சியின் குரலாக ஒலிக்கும் பவன் கேராவிற்கு அங்கீகாரம் அளிக்க ராகுல் விரும்புவதாகத் தெரிகிறது.

   

ஆனால், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவரை தமிழகப் பிரதிநிதியாக ஏற்க திமுக தலைமை தயக்கம் காட்டி வருகிறது. ஒரு சீட்டுக்காகக் கட்சிக்குள் நிலவும் இந்த கோஷ்டி பூசல் மற்றும் ராகுல் காந்தியின் புதிய வியூகம் ஆகியவற்றால், தமிழக காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட அந்த ஒரு இடம் யாருக்கு கிடைக்கும் என்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.