சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள எஜோவ் நகரில், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன பன்றி பண்ணை ஒன்று 26 அடுக்குமாடி வானளாவிய கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 600 மில்லியன் டாலர் இந்திய மதிப்பில் சுமார் 5,000 கோடி ரூபாய்க்கும் மேல் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட பண்ணையில், ஒரே நேரத்தில் சுமார் 12 லட்சம் பன்றிகளை வளர்க்கும் வசதி உள்ளது.
இந்நிலையில் பன்றி இறைச்சிக்கான தேவையை பூர்த்தி செய்வதற்காக அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த கட்டிடம், பார்ப்பதற்கு ஒரு பெரிய குடியிருப்பு வளாகம் போன்ற தோற்றத்தை அளிக்கிறது. இந்த பண்ணை முழுவதும் தானியங்கி முறையில் இயங்குகிறது. இதில் பன்றிகளுக்கு உணவு வழங்குவதற்காக 30,000-க்கும் மேற்பட்ட தானியங்கி புள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன.
A 600 million dollar 26 story skyscraper housing 1.2 million pigs.pic.twitter.com/xW0IuuDBYb
— Massimo (@Rainmaker1973) March 1, 2026
“>
மேலும் இவை ஒரே ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் உணவை விநியோகிக்கின்றன. மேலும், கட்டிடத்திற்குள் முறையான காற்றோட்டம், வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் கழிவு மேலாண்மை போன்ற வசதிகள் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த பண்ணையின் வீடியோ, சீனாவின் தொழில்நுட்ப வளர்ச்சியை உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
