தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று, காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைத்துள்ளது. கடந்த மாதம் 10-ஆம் தேதி தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் முதற்கட்டமாக செங்கோட்டையன், புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உட்பட 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்ற நிலையில், கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு கூட்டணி கட்சிகளையும் உள்ளடக்கி அமைச்சரவை 34 பேராக விரிவாக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவையின் அதிகாரப்பூர்வ மூப்பு (சீனியாரிட்டி) பட்டியலை அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மூப்பு பட்டியலில் தவெக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்தும் (புஸ்சி ஆனந்த்), மூன்றாம் இடத்தில் பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும், நான்காம் இடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜும் இடம்பெற்றுள்ளனர்.
இந்த புதிய பட்டியலில் தமிழக அரசியலிலும், அமைச்சரவையிலும் மிகவும் மூத்தவராகக் கருதப்படும் கே.ஏ. செங்கோட்டையன் 5-வது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக்காலங்களில் முக்கியப் பொறுப்புகளை வகித்த அனுபவமிக்கவரான செங்கோட்டையனுக்கு, தற்போது விஜய் அமைச்சரவையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், சீனியாரிட்டி வரிசையில் அவர் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கூட்டணி கட்சிகளைப் பொறுத்தவரை, உயர்கல்வித் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸின் பி. விஸ்வநாதன் மூப்பு பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ் குமார் 12-வது இடத்திலும், சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் ஏ.எம். ஷாஜஹான் 13-வது இடத்திலும் உள்ளனர். தவெக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியும், சமூக நீதித் துறை அமைச்சருமான வன்னி அரசு இந்த மூப்பு பட்டியலில் 14-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்த அமைச்சரவையில் 29-வது இடத்தில் நிதி அமைச்சர் என். மேரி வில்சனும், 32-வது இடத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர். குமாரும், பட்டியலின் இறுதி இடமான 35-வது இடத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவும் உள்ளனர். அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ள சூழலில், முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு 6 மாத கெடு விதித்து மக்கள் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…