கால கொடுமை கதிரவா.. புஷ்பா 2க்கு பயந்து துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடிய தமிழ் பாடங்கள்..!

By Nanthini on மார்கழி 3, 2024

Spread the love

தென்னிந்திய சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நிற்கும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா தி ரூல் படத்தின் முதல் பார்வை இந்த ஆண்டு வெளியானதில் இருந்தே படம் குறித்து பார்வையாளர்கள் மனதில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் அல்லு அர்ஜுன் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தார். இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிக்கெட் விண்டோவில் படம் பெரும் வசூலை ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ்பா 2: தி ரூல்' படத்தின் டீசர் ரிலீஸுக்கு நாள் குறித்த அல்லு அர்ஜுன்! |  Allu Arjun's Pushpa 2 The Rule Teaser Release Date Locked

   

அதேசமயம் ரிலீசுக்கு முன்பே பல கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது புஷ்பா 2 திரைப்படம் ரிலீஸ் க்கு முந்தைய வியாபாரத்தில் 1085 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா 2 அதிக வசூலை அதன் திரையரங்கு உரிமைகள் மூலம் ஈட்டி உள்ளது.  படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் புஷ்பா 2 படத்திற்கு குபா ப்ராஜெக் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது பெற்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்துள்ளார். தற்போது படக்குழுவினர் இந்தியா முழுவதும் பிரமோஷன் வேலைகளில் பிஸியாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் கூட சென்னையில் புஷ்பா 2 பிரமோஷன் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.

   

புஷ்பா 2' 2-வது சிங்கிள் 'பீலிங்ஸ்' எப்படி? - அல்லு அர்ஜுன், ராஷ்மிகாவின்  வித்தியாச நடனம்! | Peelings song from Pushpa 2 The Rule - hindutamil.in

 

இந்நிலையில் ஒரு சில தமிழ் திரைப்படங்கள் புஷ்பா 2 படத்துக்காக வழிவிட்டு உள்ளது. டிசம்பர் ஆறாம் தேதியில் வெளியாக இருந்த ஃபேமிலி திரைப்படம், பிளட் அண்ட் ப்ளாக் ஆகிய இரண்டு திரைப்படங்களும் தள்ளிப் போய் உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை தவிர அந்த நாளில் ராஜா கிளி, ஆலம்பனா போன்ற ஒரு சில திரைப்படங்கள் வெளியாக இருந்த நிலையில் அந்தத் திரைப்படங்களில் ரிலீஸ் செய்தியை தள்ளி வைத்துள்ளனர். இருந்தாலும் டிசம்பர் மாதம் விடுதலை 2, ராஜா கிளி, சூது கவ்வும், ஒன்ஸ் அபொன் எ டைம் இன் மெட்ராஸ் போன்ற படங்கள் வெளியாக உள்ளது. நிறைய திரைப்படங்கள் பொங்கலுக்கு தள்ளிப்போனதுக்கு காரணம் புஷ்பா 2 தான் என்றும் கூறப்படுகிறது.