vidamuyarchi

விடாமுயற்சி படத்துக்கு பேரிடியாக வந்த ஹாலிவுட் படக்குழு.. கேட்ட தொகையால் விழிபிதுங்கி நிக்கும் LYCA….

By admin on மார்கழி 3, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் அஜித்குமார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் சொந்த உழைப்பு விடாமுயற்சியால் இன்றளவும் வளர்ந்து நிற்கிறார். ஆரம்பத்தில் கார் ரேசராக தனது கேரியரை தொடங்கிய அஜித்குமார் அவ்வப்போது மாடலாகவும் பணிபுரிந்து வந்தார்.

   

அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 1990களில் சினிமாவில் அறிமுகமான அஜித்குமார் சாக்லேட் பாயாக வம் வந்தார். இவர் நடித்த காதல் மன்னன் வாலி சிட்டிசன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. இவரை காதல் மன்னன் என்றும் அழைப்பர் தல என்றும் அழைப்பர்.

   

எப்போதுமே அஜித்குமார் எந்த ஒரு பிரச்சினைகளிலும் விமர்சனங்களிலும் சிக்கவே மாட்டார். தான் உண்டு தன் வேலை உண்டு நடிப்பு உண்டு என்று இருப்பவர். எளிமையான மனிதரும் கூட. பல இடங்களில் சாதாரண மனிதரைப் போலவே வந்து செல்வார். மற்ற நடிகர்களை போல் இல்லாமல் ஒரு கூட்டத்தை திரட்டி கொண்டு வரமாட்டார்.

 

தற்போது அஜித்குமார் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் திரைப்படம் தான் விடாமுயற்சி. நீண்ட மாதங்களாக இந்த விடாமுயற்சி படப்பிடிப்பு பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த விடாமுயற்சி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது.

இந்நிலையில் இந்த விடாமுயற்சி படம் ஹாலிவுட் படமான பிரேக்டவுன் எந்த திரைப்படத்தின் ரீமேக் தான் என்ற தகவல் வெளியானது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. அதைப் பார்த்த ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் தற்போது விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான LYCA ப்ரொடக்ஷனுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

அதில் எங்களது அனுமதி இன்றி நீங்கள் எங்களது கதையை விடாமுயற்சி படத்தில் பயன்படுத்தியதற்காக 150 கோடி டிமாண்ட் கேட்டு இருக்கிறார்கள். இதனால் LYCA ப்ரொடக்ஷன்ஸ் என்ன செய்வது என்று விழிப்பிதுங்கி இருக்கிறார்கள். இப்போது அப்போது ரிலீசாகும் என தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது விடாமுயற்சி திரைப்படம். தற்போது இந்த பிரச்சனையால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போக கூடுமோ என்று சினிமா வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.