ஒத்த வாழைப்பழத்தை ரூ.52 கோடிக்கு ஏலத்தில் எடுத்து சாப்பிட்ட தொழிலதிபர்.. அப்படி இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா..?

By Nanthini on மார்கழி 3, 2024

Spread the love

சீனாவை பூர்விகமாகக் கொண்ட கிரிப்டோ கரன்சி தொழிலதிபர் ஒருவர் கடந்த வாரம் சுமார் 52 கோடிக்கு ஒரு வாழைப்பழத்தை வாங்கி உலக அளவில் ஒரே நாளில் பிரபலம் அடைந்துள்ளார். அந்த வாழைப்பழத்தை அவர் சாப்பிடுவதாக கொடுத்த வாக்கையும் தற்போது நிறைவேற்றியுள்ளார். நியூயார்க்கில் உள்ள சதபி ஏலம் மையத்தில் நடந்த ஏலத்தில் மவுரிசியோ கேட்டலான் என்ற கலைஞரின் காமெடியன் என்று பெயரிடப்பட்ட கலை படைப்பு வைக்கப்பட்டது. அது சுவற்றில் டேப் மூலமாக ஒட்டப்பட்ட ஒரு வாழைப்பழம் ஆகும். அதனை வாங்க சுமார் ஏழு பேர் ஏலத்தில் பங்கேற்றனர்.

ரூ.52 கோடிக்கு ஏலம் போன டேப் போட்டு சுவற்றில் ஒட்டிய ஒற்றை வாழைப்பழம்! |  YourStory

   

அதில் ஜஸ்டின் சன் ஆறு பேரையும் மிஞ்சி அந்த ஒற்றை வாழைப்பழத்தை ஏலத்தில் எடுத்தார். இதனைத் தொடர்ந்து ஹாங்காங்கில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அந்த வாழைப்பழத்தை அவர் சாப்பிட்டார். ஒவ்வொரு முறையும் இந்த கலை படைப்பு காட்சிப்படுத்துவதற்கு முன்பாக வாழைப்பழம் மாற்றி வைக்கப்படும். இனி இந்த கலை படைப்பை காட்சிப்படுத்தும் உரிமையுடன் பலத்தை எவ்வாறு மாற்றுவது என்பது குறித்த வழிகாட்டுதலையும் சன் பெற்றிருக்கிறார். இந்த கலைப்படைப்பில் வைக்கப்படும் வாழைப்பழம் இதற்கு முன்பு இரண்டு முறை சாப்பிடப்பட்டுள்ளது.

   

Banana artwork: வாழைப்பழ கலைப்படைப்பை சுமார் ரூ 52 கோடிக்கு வாங்கி  சாப்பிட்ட தொழிலதிபர் - ஏன் இதை செய்தார்? - BBC News தமிழ்

 

இதை சாப்பிடுவதும் இந்த கலைப்படைப்பின் வரலாற்றில் இடம்பெறும் எனவும் மற்ற வாழைப்பழங்களை விட இது எனக்கு சுவையாக இருந்தது எனவும் ஜஸ்டின் தெரிவித்துள்ளார். மேலும் 34 வயதான அவர் இந்த தலைப்படைப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறியுள்ளார். இருந்தாலும் இந்த வாழைப்பழம் ஒரு வேளை அழுகி இருக்குமோ என்ற கேள்வி தனக்குள் இருந்ததை அவர் வெளிப்படையாக அவர் ஒப்பு கொண்டுள்ளார். இந்த வாழைப்பழம் உலகின் மிக விலை உயர்ந்த பழமாக ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் நினைவு பரிசாக ஒரு வாழைப்பழமும் ஒரு டேப்ரோலும் வழங்கப்பட்டது.