இயக்குனர் சிகரம் பாரதிராஜாவின் மகன் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம்..!

Spread the love

தமிழ்நாட்டின் ஐந்திணைகளின் பெருமைகளையும் அழகிகளையும் அங்குள்ள கிராமத்து மக்களின் வாழ்வியலையும் அவர்களுடைய மொழியை தமது செல்லுலாய் கண்களால் காட்சிப்படுத்தியவர் தான் இயக்குனர் சிகரம் பாரதிராஜா. சினிமா செட்டுக்குள் பார்த்துப் பார்த்து வறண்டு போன கண்களுக்கு கிராமத்து வீடுகளுக்குள் புகுந்து இயற்கை அழகை கேமராவில் புகுத்தி என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா என்ற அந்த கம்பீரமான குரல் தமிழர்கள் அனைவரும் ஒரே குலம் என்பதை நினைவூட்டும். பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்திய பாரதிராஜா தன்னுடைய இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் திரைப்படம் மூலமாக தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை அறிமுகப்படுத்தினார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து மனோஜ் பாரதிராஜா வருஷம் எல்லாம் வசந்தம், சமுத்திரம் மற்றும் ஈர நில உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் நடித்த எந்த திரைப்படமும் அவருக்கு பெயரை பெற்று தரவில்லை. இதனால் சில காலம் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த மனோஜ் பாரதிராஜா சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு நடிப்பு கை கொடுக்கவில்லை என்பதால் சோர்வு அடையாமல் வெளிநாட்டுக்குச் சென்று இயக்குனருக்கான பிரத்தியேகமான பயிற்சியை பயின்று இயக்குனராக அவதாரம் எடுத்த மனோஜ் பாரதிராஜா மார்கழி திங்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார்.

கிராமத்து காதலை ரசித்து சித்தரித்த அளவில்லா காதல் திரைப்படங்களை கொடுத்த ஜாம்பவான் பாரதிராஜாவின் மகன் என்பதை தன்னுடைய முதல் படத்திலேயே கையாண்டு ஒரு அழகான அழுத்தமான காதல் கதையை கொடுத்தார். இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாரதிராஜாவும் நடித்திருந்தார். இதனிடையே மனோஜ் பாரதிராஜா நடிகை நந்தனாவை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் அனைவருக்கும் அதிர்ச்சி தரும் விதமாக பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா திடீர் மாரடைப்பு காரணமாக சற்று முன் காலமானார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த தமிழ் திரை உலகினர் மற்றும் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஆட்சியை தூக்கி பிடிச்சுட்டு…. அடிமடியிலேயே கை வைக்கும் கம்யூனிஸ்ட்கள்…. விஜய் கொடுத்த ‘செக்’….. இடைத்தேர்தலில் செம டுவிஸ்ட்….!

தமிழக அரசியலில் தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்துக்கொண்டே, இடைத்தேர்தலில் அக்கட்சியின் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவு…

7 minutes ago

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்…! கார் விபத்தில் சிக்கி 4 பேர் ரத்த வெள்ளத்தில் இறப்பு…. கதறும் குடும்பத்தினர்…. நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்..!!

ஹைதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலமாகுலா எல்லைப் பகுதியில், விநாயகர் சிலை விசர்ஜன விழாவை முடித்துவிட்டு மெட்டுகட்டா தண்டாவிலிருந்து ஷம்ஷாபாத் நோக்கிச்…

12 minutes ago

CM விஜய்யின் மனைவியா த்ரிஷா?…. “தமிழ்நாட்டை கேவலப்படுத்தாதீங்க”…. அதிமுக மாஜி பகீர்….. தமிழக அரசியலில் பரபரப்பு…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய்யின் பொதுநிகழ்வுகள் மற்றும் தனிப்பட்ட வருகைகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதன்…

12 minutes ago

“லிஃப்ட்டிற்குள் செக்யூரிட்டி கார்டுக்கு பளார்…” அதிகார தோரணையில் அராஜகம் செய்த நபர்…. பண்றது எல்லாமே தப்பு…! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இகோ வில்லேஜ் 2 குடியிருப்பு வளாகத்தில், நவீன் பஸ்வான் என்ற வாடகைதாரர் தனது காரை பார்க்கிங்…

22 minutes ago

“5 வயது மகளை கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த தந்தை…” 3 பக்க கடிதம் எழுதி வைத்து… வீட்டுக்கு வந்து பதறிய தாய்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்…!!

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில், கட்டுமான தள மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த 40 வயது நபர் ஒருவர், கடுமையான நிதி…

33 minutes ago