Categories: சினிமா

விஜய் இல்லை என்றால் சினிமா நின்றுவிடாது… அதுதான் எதார்த்தம்.. பிரபல நடிகரின் ‘நச்’ கருத்து!

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விஜய். தன்னுடைய புகழின் உச்சியில் இருக்கும் விஜய் ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதற்கேற்றார் போல அவரின் சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெற்று வருகின்றன.

தற்போது மாஸ் நடிகராக இருக்கும் விஜய், 90 களில் தனக்கான இடத்துக்காக போராடிக் கொண்டிருந்தார். இடையிடையே ஹிட் கொடுத்திருந்தாலும் அவருக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் கில்லி படத்துக்கு முன்பே உருவானது. அதனால் அதற்கு முந்தைய படங்களில் எல்லாம் தன்னுடைய படத்தில் துறைசார்ந்த பிரபலங்கள் இருக்க வேண்டும், அது படத்தின் பிஸ்னஸுக்கு உதவும் என விரும்புவார்.

அதே போல அவரை அடுத்த கட்டத்துக்கு உயர்த்திய திரைப்படம் என்றால் அது ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கி திரைப்படம்தான். அந்த படம்தான் முதல் முதலில் விஜய் நடித்ததில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த படம் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் விஜய்யின் மார்க்கெட் ஏறுமுகத்தில் சென்று இன்று இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார்.

விஜய் தற்போது நடித்துவரும் ஜனநாயகன் படத்தோடு சினிமாவில் இருந்து விலகி, முழுநேர அரசியலில் ஈடுபடவுள்ளார். இந்நிலையில் பலரும் விஜய் சென்றுவிட்டால் அவரின் இடம் வெற்றிடமாகிவிடும் என புலம்பி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிங்கம்புலி இதுபற்றி பேசுகையில் “யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சினிமா இயங்கிக் கொண்டுதான் இருக்கும். யாராவது சினிமாவை நான் வென்றுவிட்டேன் என்று சொன்னால் அவர்கள் சினிமா தெரியாமல் பேசுகிறார்கள் என்றுதான் அர்த்தம். ஒருவர் சென்றால் மற்றொருவர் அந்த இடத்துக்கு வந்துவிடுவார். அதனால் சினிமாவில் வெற்றிடம் என்பது கிடையாது” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“அமைச்சர்கள் எங்கே? தனியாக லண்டன் பறந்த முதல்வர்”…. பின்னணியில் இருக்கும் ரகசியம்…. விஜய்க்கு எதிராக பொங்கிய ஆர்பி உதயகுமார்….!

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின்படி, தேனி மேற்கு மாவட்டம் சின்னமனூரில் அக்கட்சியின்…

6 minutes ago

ஈரானை அழிக்கப் போகிறாரா ட்ரம்ப்?… “நான் உள்ளே சென்று”…. புதிய பரபரப்பை கிளப்பிய அமெரிக்க அதிபர்…. உலக நாடுகளுக்கு காத்திருக்கும் ஆபத்து….!

மத்திய கிழக்கில் பல மாதங்களாகத் நீடித்து வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர், தற்போது மிகவும் கவலைக்கிடமான ஒரு…

17 minutes ago

“பதவிக்காக வாய்க்கு வந்தபடி பொய்யை கொட்டுகிறார்”… அமைச்சர் வன்னியரசை கிழித்து தொங்கவிட்ட கோவி.செழியன்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

மாணவர் பாரதிதாசனுக்கு அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவது தொடர்பாக எழுந்த சர்ச்சையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான காரசாரமான விவாதங்கள்…

24 minutes ago

“விஜய்யிடம் இருந்து திடீரென வந்த போன் கால்…” என்ன விஷயம்…? ‘பத்தா’ இசை வெளியீட்டு விழாவில் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி…!!

பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக…

36 minutes ago

“அடப்பாவமே”…. விநாயகரோடு சேர்த்து 7 பவுன் நகையையும் கரைத்த மூதாட்டி… சென்னையில் பரபரப்பு…..!

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாட்டப்பட்டு வரும் நிலையில், வீடுகளில் வைத்து வழிபட்ட விநாயகர் சிலைகளை 3,…

42 minutes ago

“அப்பா அதுக்காக வர மாட்டார்…” அவர் எனக்கு கற்று கொடுத்த பாடம்… ‘சிக்மா’ விழாவில் மனம் திறந்து பேசிய இயக்குநர் ஜேசன் சஞ்சய்…!!

தமிழ்நாடு முதலமைச்சரும் பிரபல நடிகருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது முதல் முழுநீள ஆக்‌ஷன்-அட்வென்ச்சர் திரைப்படமான 'சிக்மா மூலமாக…

45 minutes ago