தமிழில் எப்படி கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மிகப் பிரபலமாக இருக்கிறதோ அதேபோல் மலையாளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக வரவேற்கப்பட்டுள்ளது. இங்கே எப்படி பிக் சூப்பர் ஸ்டார் ஆன கமல்ஹாசன் தொகுத்து வணங்குகிறாரோ அதேபோல் மலையாளத்தில் மெகா சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்கள் தான் மலையாள பிக் பாஸை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
தற்போது இவர் தொகுத்து வழங்குவதாலே அந்த நிகழ்ச்சிக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இவர் சீசன் 5 வரை தொகுத்துள்ளார். தன்னுடைய பொறுமையாளும் தெளிவான சிந்தனை மூலமும் பிக் பாஸை இதுவரை சிறப்பாக வழிநடத்தி கொண்டு சென்றிருக்கிறார். எல்லாருக்கும் சரிசமமான பங்கையே பிரித்து தருவார். மோகன்லால் இதுவரை நடந்த ஐந்து சீசன்களும் இவர் கையாண்ட விதம் மிகச் சிறப்பாக இருந்தது. தற்போது இன்று பிக் பாஸ் சீசன் 5 காண ப்ரமோஷன் வெளியாகி உள்ளது. இன்று இரவிலிருந்து மோகன்லால் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 முதல் நாள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதில் மிகப் பிரபலமான பலரும் கலந்து கொள்கிறார்கள். முக்கியமாக தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் ஸ்ரீது கிருஷ்ணன் அவர்கள் கலந்து கொள்ள உள்ளாராம். இவர் தமிழ் மலையாளம் என்று இரு மொழிகளிலும் பட்டய கிளப்பிக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார். பத்து எண்றதுக்குள்ள, இருளில் ராவணன், ரங்கூன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான இவர், முதன் முதலில் சீரியலில் தான் நடிப்பை ஆரம்பித்தார்.
அதில் ஏழாம் வகுப்பு சி, ஓடி விளையாடு பாப்பா, ஸ்டார் மியூசிக், சூப்பர் சிங்கர் போன்ற பல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலமான ஒருவர் தான் இவர். தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொள்ள உள்ளார், இவருடன் இணைந்து அர்ஜுன், அப்சரா, ஜோஜோ, கேப்ரி, ஜென்மோனி போன்றோர் இணைந்துள்ளார்களாம்.
View this post on Instagram
