கவின், துரு விக்ரமை விட்டுட்டு சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன விஜயின் மகன்.. SK-வின் ரியாக்ஷன் இது தான்..

By Ranjith Kumar

Updated on:

சில நாட்களுக்கு முன்னால் விஜயின் மகனான சஞ்சய் அவர்கள் படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது, அப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் வெளியிடுவதாக சஞ்சையும் லைக்கா நிறுவனமும் இணைந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வந்து கொண்டிருந்தது. அதை கண்ட ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருந்தார்கள்.

ஆனால், தயாரிக்க உள்ள லைக்கா நிறுவனம் சில நாட்களுக்கு முன்னால் ஜேசன் படத்தை தயாரிக்க முடியாது என்று கைவிரித்து விட்டது. லைக்கா நிறுவனம் இதற்கு முன்னால் தயாரித்து வெளியிட்டால் லால் சலாம் படம் படு தோல்வி அடைந்ததாலும், அதற்கு முன்னால் வெளியிட்ட பல படங்களும் தோல்வியை தழுவியதால் லைக்கா நிறுவனத்தின் கல்லாவில் காசு இல்லாத நிலை ஏற்பட்டது. தற்போது அந்த பிரச்சனைகளை எல்லாம் தீர்த்து விட்டு மீண்டும் சஞ்சய் உடன் கைகோர்த்துள்ளது லைக்கா.

   

தற்போது இந்த பிரச்சனை முடிந்து இன்னொரு பிரச்சினை ஆரம்பித்துள்ளது. ஜேசன் சஞ்சய் முதலில் கவின் அவர்களுக்கு கதை கூறினார் என்று தகவல் வெளியாகியிருந்தது, அதை தாண்டி தற்போது விக்ரமின் மகன் துரு விக்ரம் அவர்களுக்கு கதை சொல்லி படபிடிப்பு இன்னும் சில நாளில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இது இரண்டுமே இல்லாமல் அடுத்த தளபதியாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் அவரிடம் கதை சொல்லி உள்ளார்.

சஞ்சயின் கதையை கேட்ட சிவகார்த்திகேயன் மிகச் சிறப்பாக இருக்கிறது, ஆனால் இது எனக்கான கமர்சியல் கதையல்ல, அதனால் இதை வேற யாரிடமாவது சொல்லுங்கள் என்று விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் படத்தில் நடிப்பதை தவிர்த்த சிவகார்த்திகேயன். இதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என்று இணையத்தில் பலரும் சர்ச்சை கிளப்பி வருகிறார்கள்.

author avatar
Ranjith Kumar