இங்க செல்லுபடி ஆகலன்னு ட்ரெயின் ஏறி பாலிவுட் சென்ற அரண்மனை நாயகன்.. இந்தி சூப்பர் ஸ்டாரிடம் ஆஜர்..

By Ranjith Kumar on பங்குனி 18, 2024

Spread the love

2014ல் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் அரண்மனை. இத்திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து, 2016ல் அரண்மனை 2 திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.  இதைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் 2021 இல் அரண்மனை 3 திரைப்படம் வெளிவந்தது.


இந்த படத்தில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தினை குஷ்பு தயாரித்திருந்தார். படத்தை உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது .இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

   


இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி அரண்மனை 4 திரைப்படத்திற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார். படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர் சி இந்த பாகத்திலும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மூன்றாம் பாகத்தில் நடித்த ராசி கண்ணா இந்த பாகத்தில் இணைந்துள்ளார்.

   

அதோடு மட்டும் இல்லாமல் அரண்மனை 4 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகை தமன்னாவும் இத்திரைப்படத்தில் நடிக்கிறார்  என்று சுந்தர் சி தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.  இப்படத்தை தயாரித்து வெளியிட இருந்த ரெட் ஜாயிண்ட் தற்போது இப்படத்தில் இருந்து விலகியதாக தகவல் கசிந்து உள்ளது. சுந்தர் சி க்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் சில பல கருத்து வேறுபாடு இருப்பதால் பிரிந்து உள்ளார்களாம்.

 

அதனால் தமிழில் இப்படத்தை நிறுத்திவிட்டு பாலிவுட் பிரபல நடிகரான அக்ஷய்குமார் கதை சொல்லி உள்ளாராம், இப்படத்தில் அக்ஷய் குமார் உடன் இணைந்து சூர்யா நடிப்பில் வெளியாகும் கங்குவா பட வில்லன் பாபி டியோல் நடிக்க உள்ளாராம். இங்க ட்ராப்பான அரண்மனை நான்காம் பாகத்தின் கதையை தான் சொல்லி அக்ஷய குமாரிடம் சம்மதம் பெற்றுள்ளார் என்று தகவல் கசிந்துள்ளது. தற்போது தமிழில் சுந்தர் சி யின் படங்கள் செல்லுபடி ஆகவில்லை என்று பாலிவுட் இருக்கு தாவி உள்ளார் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.