Connect with us

உண்மையா தான் இருக்கன்.. 4 வருத்தத்துக்கு முன்னாடி எடுத்த படத்துக்கு இப்ப வர கடன் கட்டுற.. மனம் நொந்து பேசிய சமுத்திரகனி..

CINEMA

உண்மையா தான் இருக்கன்.. 4 வருத்தத்துக்கு முன்னாடி எடுத்த படத்துக்கு இப்ப வர கடன் கட்டுற.. மனம் நொந்து பேசிய சமுத்திரகனி..

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் சமுத்திரகனி. இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தொலைக்காட்சி நடன இயக்குனராகவும் இருந்து வருகிறார்.ராஜபாளையம் பகுதியை சேர்ந்த இவர் 1998 ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்தார். புகழ்பெற்ற இயக்குனரான கே பாலசந்தரனிடம் துணை இயக்குனராக பணியாற்றினார்.


அதன் பிறகு கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். அதற்கு முன்னால் 2001 ஆம் ஆண்டு பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தில் இவர் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.

தற்போது இவர் தமிழ் சினிமாவில் சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களை கொடுத்து வருகின்றார்.இவர் இயக்கும் படங்கள் அனைத்துமே இந்த சமூகத்திற்கு ஏதாவது ஒரு கருத்தை சொல்லும் வகையில் தான் அமைந்திருக்கும். இந்த நிலையில் இவர் சசிகுமார் நடிப்பில் வெளியாகிய மாபெரும் வெற்றி பெற்ற நாடோடிகள் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது பாகத்தை சமுத்திரக்கனி தான் தயாரித்தார் தற்போது படத்தினால் அடைந்த மாபெரும் நஷ்டத்தை மனதளவில் நொந்து இன்டர்வியூவில் மனம் திறந்து பேசி உள்ளார்.

   


சமுத்திரக்கனி ; நாடோடிகள் 2 எடுத்ததனால எனக்கு பெரிய நஷ்டம் ஆயிடுச்சு. ஆனா அந்த கடனை இப்ப வரையும் கட்டிட்டு தான் இருக்கேன். ஞாயிற்றுக்கிழமை கேட்டு வரும் கடைக்காரங்க கிட்ட திங்கட்கிழமை பணத்தை எடுத்து வைக்கிறேன். ஏன்னா அவ்வளவுதான் அது நஷ்டம் ஆச்சு அதுக்கு அடுத்த விஷயத்தை பார்க்க ஆரம்பிச்சிடனும், அதுலயே தேங்கியிருக்கக் கூடாது. நான் அந்த பிரபஞ்சத்தை நம்புறேன், அது எனக்கு ஒரு நல்ல விஷயத்தை செய்யணும், அந்த மாதிரி தான் விமானம் படம் எனக்கு நின்னுச்சு. நம்பிக்கைதான் எல்லாமே, நம்புனா வாழ்க்கையில் எல்லாம் நல்லதே நடக்கும். உண்மையா இருக்கிற வரைக்கும் எனக்கு எந்த குறையும் இல்லை, நான் இப்ப வரைக்கும் உண்மையா தான் இருக்கேன். அப்படின்னு சமுத்திரகனி அவர்கள் தனக்கு நடந்த சோகத்தை வெளிப்படையாக பேசி உள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Nakkheeran Studio (@nakkheeranstudio)

author avatar
Ranjith Kumar
Continue Reading
To Top